Home Front Page News தமிழ் புத்தகத் திருவிழாடாக்டர் கே.சிவன் தொடங்கி வைத்தார்

தமிழ் புத்தகத் திருவிழாடாக்டர் கே.சிவன் தொடங்கி வைத்தார்

பெங்களூரு, டிச. 20: கர்நாடக தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் தமிழ்ப் புத்தகத்திருவிழாவை இஸ்ரோ முன்னாள் தலைவர் டாக்டர் கே.சிவன் தொடக்கி வைத்தார். விழாவிற்கு பெங்களூரு வடிகால் வாரியத்தலைவர் டாக்டர் வி.ராம்பிரசாத் ஐஏஎஸ் தலைமை தாங்கினார்.
பெங்களூரு இன்ஸ்ட்டுயூட் ஆப் என்ஜினியர்ஸில் வெள்ளிக்கிழமை (டிச.20) முதல் டிச. 29 ஆம் தேதி வரை 10 நாட்கள் தமிழ்ப் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. விழாவை இஸ்ரோ முன்னாள் தலைவர் விண்வெளி அறிவியல் அறிஞர் டாக்டர் கே.சிவன் தொடக்கி வைத்தார். விழாவிற்கு பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியத்தலைவர் டாக்டர் வி.ராம்பிரசாத் ஐஏஎஸ் தலைமை தாங்கினார்.
நிகழ்வில் இந்திய பேனா நண்பர் பேரவையில் தலைவர் மா.கருண், திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கத்தின் பொதுச் செயலாளர் சு.முருகன், மீனால் கூடுதல் இயக்குனர் சுங்கத்துறை கோ. மாணிக்கவாசகம், வாசன் கண் மருத்துவமனையைச் சேர்ந்த வி கே ஹர்ஷவர்தன், சுந்தர முருகேசன், தொழிலதிபர் ஆர். துரை, தனவிருத்தி கடன் கூட்டுறவு வங்கியின் நிறுவனர் திரு சுந்தரவேலு, தாய்மொழி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்டி குமார், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version