Home Lead News மாணவர்களுக்கு இலவச பஸ் சேவை

மாணவர்களுக்கு இலவச பஸ் சேவை

பெங்களூரு: ஜூலை 11-
கர்நாடக மாநிலத்தில் 5 உத்திரவாத திட்டங்கள் அமல் படுத்தப்பட்டு மக்கள் பெரும் அளவில் பயன் அடைந்து வரும் நிலையில் இப்போது அரசு பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் சேவை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது கர்நாடகா மாநில துணை முதலமைச்சர் டி கே சிவகுமார் இதை அறிவித்துள்ளார்.
இது எப்படி எல்கேஜி முதல் பியுசிவரை படிக்கும் அரசு பள்ளி கல்லூரி மாணவர்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம்
மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு போக்குவரத்து சலுகைகளை அரசாங்கம் அமல்படுத்தியுள்ளது. அரசுப் பள்ளிகளின் மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்ல இலவசப் வசதிகள் கிடைக்கும்.
துணை முதல்வரும் பிரதேச காங்கிரஸ் தலைவருமான டி.கே. சிவக்குமார் இது குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு உள்ளார் மாநில அரசின் கர்நாடக பொதுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பஸ் ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அறிவித்தார்.
அரசு கேபிஎஸ் பள்ளிகளில் எல்கேஜி முதல் பியூசி வரை படிக்கும் குழந்தைகளுக்காக இலவச பஸ் முறையான போக்குவரத்து பாக்ய யோஜனாவை செயல்ப செயல்படுத்துவதாக அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளிகளில் குழந்தைகளின் வருகை மற்றும் கற்றல் தரத்தை அதிகரிக்க அரசாங்கம் இந்த முக்கியமான முடிவை எடுத்துள்ளது. அரசுப் பள்ளிக் குழந்தைகள் பேருந்து வசதியை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கான அரசின் துணிச்சலான நடவடிக்கை இது என்றும், ஏழைகளின் குழந்தைகளை கல்வி ரீதியாகவும் நிதி ரீதியாகவும் மேம்படுத்துவதற்கான அரசின் முக்கியமான முயற்சி இது என்றும் அவர் கூறினார்.
அரசாங்கத்தின் இலவச போக்குவரத்து பாக்யா திட்டம் அரசுப் பள்ளிகளை வலுப்படுத்துவதை வலியுறுத்தும் என்று அவர் எக்ஸ் வலைதளத்தில் ட்வீட் செய்தார்.
இந்தத் திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்பது குறித்த தகவல்கள் உடனடியாக தெரியவில்லை.

Exit mobile version