டெல்லி, நவ, 11- தலைநகர் டெல்லியில் நேற்று மாலை நடந்த கார் வெடிப்பு நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே விசாரணையில் காரை ஒட்டி வந்தது டாக்டர் உமர் முகமது கான் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், அவருக்கும் ஃபரிதாபாத் தீவிரவாத குழுவுக்கும் இடையேயான தொடர்பும் அம்பலமாகி வருகிறது. எப்ப பாரு இட்லி, தோசையா?இந்த மொறுமொறுப்பான டிஃபன் ரெசிபியை செய்யுங்களேன்! செம ஸ்மார்ட்டுங்க.. ரூ.1.73 கோடி மருத்துவ பில்லை ரூ.30 லட்சமாக குறைத்த ஏஐ.. ஹே எப்புட்றா? பின்னணி செல்வமகள் சேமிப்பு திட்டம்.. இந்த 10 விஷயத்தை நோட் பண்ணுங்க.. பணம் தேடி வரும்! ரொம்ப முக்கியம் நேற்று மாலை டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு ஏற்பட்டது. இதில் அருகே இருந்த பல கார்கள் தீயில் எரிந்து நாசமாகியது. இந்தச் சம்பவத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே இந்த கார் வெடிப்பு தொடர்பாகச் சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. கார் வெடிப்பு அதாவது செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் நுழைவாயில் 1 அருகே திங்கட்கிழமை மாலை வெடித்த ஹூண்டாய் ஐ20 காரில் வெடிபொருட்கள் இருந்துள்ளன. மாலை 6:52 மணியளவில் கார் வெடிப்பு ஏற்பட்ட நிலையில், இது அப்பகுதியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாகப் பல்வேறு தரப்பினரும் இப்போது விசாரணை நடத்தி வருகிறார்கள். இது ஜம்மு காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத குழுக்களின் தற்கொலைப்படைத் தாக்குதலைப் போல இருப்பதாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். இச்சம்பவத்திற்கும் புல்வாமாவுக்கும் இடையே உள்ள தொடர்பை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.















