Home விளையாட்டு முதலிடம் பிடித்தார் ஸ்கைவர் பிரண்ட்

முதலிடம் பிடித்தார் ஸ்கைவர் பிரண்ட்

துபாய், ஜூலை 30-
ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் தரவரிசை பட்​டியலில் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. இதில் பேட்​டிங்​கில் இந்​தி​யா​வின் ஸ்மிருதி மந்​த​னாவை பின்​னுக்​குத் தள்ளி முதலிடம் பிடித்​தார் இங்​கிலாந்து அணி​யின் கேப்​டன் நாட் ஸ்கைவர் பிரண்ட். அதேவேளை​யில் கேப்​டன் ஹர்​மன் பிரீத், ஜெமிமா ரோட்​ரிக்ஸ் ஆகியோர் முன்​னேற்​றம் அடைந்​துள்​ளனர். தரவரிசை​யில் நாட் ஸ்கைவர் பிரண்ட் கடைசி​யாக 2023-ம் ஆண்டு முதலிடம் வகித்​திருந்​தார். சமீபத்​தில் இந்​தி​யா​வுக்கு எதி​ராக நடை​பெற்ற ஒரு​நாள் போட்டி தொடரில் 32 வயதான நாட் ஸ்கைவர் பிரண்ட் 160 ரன்​கள் எடுத்​திருந்​தார். இதன் மூலம் 731 புள்​ளி​களு​டன் அவர், முதலிடத்தை பிடித்​துள்​ளார். ஸ்மிருதி மந்​தனா 728 புள்​ளி​களு​டன் 2-வது இடத்​துக்கு தள்​ளப்​பட்​டுள்​ளார். இந்​திய அணி​யின் கேப்​டன் ஹர்​மன்​பிரீத் கவுர் 21-வது இடத்​தில் இருந்து 11-வது இடத்​துக்​கும், நடு​வரிசை பேட்​டிங் வீராங்​க​னை​யான ஜெமிமா ரோட்​ரிக்ஸ் 15-வது இடத்​தில் இருந்து 13-வது இடத்​துக்​கும் முன்​னேறி உள்​ளனர்.பந்து வீச்சு தரவரிசை​யில் இந்​தி​யா​வின் தீப்தி சர்மா 4-வது இடத்​தில் தொடர்​கிறார். இங்​கிலாந்​தின் சோஃபி எக்​லெஸ்​டோன், ஆஸ்​திரேலி​யா​வின் ஆஷ் கார்ட்​னர், மேகன் ஸ்கட் ஆகியோர் முறையே 1 முதல் 3-வது இடங்​களில்​ உள்​ளனர்​.

Exit mobile version