Home விளையாட்டு ‘விக்கெட்களை வீழ்த்துவதற்கே முன்னுரிமை’ – பிரசித் கிருஷ்ணா

‘விக்கெட்களை வீழ்த்துவதற்கே முன்னுரிமை’ – பிரசித் கிருஷ்ணா

பர்மிங்ஹாம், ஜூன் 30- விக்கெட்களை வீழ்த்துவதற்கே நான் முன்னுரிமை அளித்து வருகிறேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா தெரிவித்தார். இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் ஜூலை 2-ம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் பிரசித் கிருஷ்ணா. பயிற்​சி​யின் இடையே செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தென் ஆப்​பிரிக்கா​வுட​னான டெஸ்ட் தொடரில்​தான் நான் அறி​முக​மானேன். இது​வரை 4 டெஸ்ட் போட்​டிகளில் விளை​யாடி 13 விக்​கெட்​களைக் கைப்​பற்​றி​யுள்​ளேன். இங்​கிலாந்து தொடர் சவாலான​தாக இருக்​கும் என்​பது எங்​களுக்குத் தெரி​யும். முதல் டெஸ்ட் போட்​டி​யில் வெற்றி பெறு​வதற்கு போதிய முயற்​சிகளை மேற்​கொண்​டோம். ஆனால்,
முடிவு வேறு வித​மாகி​விட்​டது. முதல் டெஸ்ட் போட்​டியில் சிறப்​பாகவே பந்​து​வீசினோம். ஆனால் 2-வது இன்​னிங்​ஸில் இங்​கிலாந்து வீரர்​கள் சிறப்​பாக விளை​யாடினர். முதல் இன்னிங்​ஸில் சரி​யான லென்த்​தில் என்​னால் பந்து வீச இயல​வில்​லை.
ஆனால் 2-வது இன்​னிங்​ஸின்​போது சுதா​ரித்து பந்​து​வீசினேன். மேலும் ஆடுகளமும் சற்று மெது​வாக இருந்​தது. இதனால் விக்​கெட்​களை எடுக்​க​முடி​யும் என்று நம்​பினேன். எதிர்​பார்த்​த​படி விக்​கெட்​களும் கிடைத்​தன. எப்​போதும் விக்​கெட்​களை வீழ்த்​து​வதற்கே நான் முன்​னுரிமை தரு​கிறேன். ஒவ்​வொரு ஓவரை வீசும் போதும் அந்த ஓவரை மெய்​டன் ஓவராக மாற்​று​வதற்கு முயற்சி செய்​கிறேன். அடுத்த 4 டெஸ்ட் போட்​டிகளில் ஜஸ்​பிரீத் பும்ரா எத்​தனை போட்​டிகளில் விளை​யாடு​வார் என்று தெரிய​வில்​லை. அவரிட​மிருந்து அதி​க​மாக நான் கற்​றுக் கொண்​டுள்​ளேன். களத்​தி​லும், பயிற்​சி​யின்​போதும் இளம் வீரர்​களுக்கு அவர் அதி​கப்​படி​யான அறிவுரைகளை வழங்​கு​வார். இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

Exit mobile version