Home Front Page News விபத்து 3 பேர் பலி

விபத்து 3 பேர் பலி

விஜயபுரா, ஜன. 24:- கன்னல் கிராஸ் அருகே தேசிய நெடுஞ்சாலை 50 இல் இந்த‌ சம்பவம் நடந்தது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், மரத்தில் மோதியதில்3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.
இறந்தவர்கள் தும்கூரைச் சேர்ந்த
அபிஷேக் சாவந்த் (34), அவுரங்காபாத்தைச் சேர்ந்த விஜயகுமார் (45) மற்றும் ராஜு கென்னூர் (30) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். காயமடைந்த ராஜு கம்பாலே மற்றும் போலா ஆகியோர் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
5 பேர் வேலைக்காக தும்கூரில் இருந்து சோலாப்பூருக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது. தகவல் கிடைத்ததும்,
விஜயபுரா கிராமப்புற காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, அந்தப் பகுதியை ஆய்வு செய்து, வழக்குப் பதிவிட்டு, விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

Exit mobile version