1.5 கிலோ தங்கம் பறிமுதல் 

பெங்களூரு, மார்ச் 19- வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட தங்கத்தை தேவனஹள்ளி சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோலாலம்பூர், குவைத், மதீனா, பஹ்ரைன் ஆகிய நாடுகளில் இருந்து வந்தவர்கள் தங்கத்தை மறைத்து கொண்டு வந்தனர்.  வளையல்கள், செயின்கள், டாலர்கள் மற்றும் வெட்டப்பட்ட துண்டுகளாக தங்கம் கொண்டு வரப்பட்டது.  தங்கம் துணியில் சுற்றப்பட்டு லக்கேஜ் பையில் மறைத்து வைக்கப்பட்டது. 99 லட்சம் மதிப்புள்ள 1.5 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  கோலாலம்பூரில் இருந்து தங்கத்தை வலை வடிவில் செய்து, அதில் வெள்ளி பூசிய கடத்தல்காரர்கள், ஏமாற்ற முயன்றனர், ஆனால் பயணிகள் சோதனையின் போது சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கியுள்ளனர். மூன்று தனித்தனி வழக்குகளில், 1.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, சட்டவிரோதமாக கடத்தலில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.