10 ஆயிரம் வங்க தேசத்தினர் பதுங்கல்

பெங்களூர்,நவ.10- பெங்களூர் உட்பட கர்நாடக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வங்கதேச நாட்டினர் சட்ட விரோதமாக குடியேறி இருப்பது என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது. நேற்று முன்தினம் நாடு முழுவதும் சட்ட விரோதமாக குடியேறியுள்ள வங்கதேசத்தினரை கண்டுபிடிக்கவும் அவர்களை அழைத்து வந்த ஏஜெண்டுகளை பிடிக்கவும் தேசிய புலனாய்வுத்துறை அதிரடி சோதனை நடத்தியது. குறிப்பாக நாடு முழுவதும் வடநாட்டினர் போல் உலா வரும் வங்கதேசத்தினர் சட்ட விரோதமாக குடியேறியது மட்டுமல்லாமல் தேச விரோத செயல்களில் ஈடுபட திட்டம் வகுத்து பயிற்சிகள் பெற்று வருவதாகவும் மத்திய புலனாய்வு துறை தெரிவித்தது. இதன் அடிப்படையில் நாடு முழுவதும் நடந்த அதிரடி சோதனையில் ஏராளமான பேர் கைது செய்யப்பட்டனர் குறிப்பாக பெங்களூரில் 11 பேர் கைது கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரிய வந்துள்ளது அதாவது பெங்களூரில் பல ஆயிரக்கணக்கான வங்கதேசத்தினர் சட்டவிரோதமாக குடியேறி சாதாரண மக்கள் போல் நடமாடி வருவதாக தெரியவந்தது. சட்ட விரோதமாக குடியேறியது மட்டுமல்லாமல் இவர்கள் ஆதார் கார்டு வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவைகளைப் பெற்றுக் கொண்டு இங்கு பல்வேறு வேலை வாய்ப்புகளிலும் இருப்பதாக தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல் இதில் பலர் தேச விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட 11 பேரை விசாரித்ததில் இந்த கும்பலின் முக்கிய தலைவன் ஜாகீர் ஹுசேன் என இவர்கள் தெரிவித்துள்ளனர். இவனுடைய உத்தரவின்படி வங்காளிகள் நகருக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர் என்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. ஆனால் என் ஐ ஏ அதிகாரிகள் சோதனைகள் மேற்கொண்ட போது முக்கிய குற்றவாளி ஜாகீர் ஹுசேன் தப்பியோடியுள்ளான். என் ஐ ஏ அதிகாரிகளின் சோதனைகளின் போது மற்றுமொறு அதிர்ச்சிகர தகவல் தெரிய வந்துள்ளது. சட்ட விரோதமாக நகருக்குள் வந்துள்ள அனைத்து வங்காளிகளிடமும் ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அட்டை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இவர்களுக்கு இந்த அட்டைகளை செய்துகொடுத்தவர்கள் யார் என்பது குறித்தும் தற்போது தீவிர விசாரணை நடந்து வருகிறது. சட்டவிரோதமாக வங்காளிகளை நகருக்கு தருவித்து அவர்கள் வாயிலாக வழிப்பறி மற்றும் கொள்ளைகளுக்கு திட்டமிட்டுள்ளதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது. இதில் பலருக்கு வழிப்பறிமற்றும் கொள்ளைக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது . தவிர இதன் கும்பலின் சில இளம் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.இவை அனைத்து குறித்தும் தற்போது தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்ட 11 பேரிடம் தீவிர விசாரணைகள் நடத்தி வருகின்றனர்.