10 நாட்கள் ஜனதா தர்ஷன் நிகழ்ச்சி நடத்தும் துணை முதல்வர்

பெங்களூரு, டிச. 30: அதிகாரிகளிடம் நேரிடையாக குறைகளை தீர்க்க முடியாத பொதுமக்கள், ஜனவரி 3 ஆம் தேதி முதல் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் நடத்தப்படும் சிறப்பு நிகழ்ச்சியில், பிரச்னைகளை எழுப்ப வாய்ப்பளிக்கப்படும். துணை முதல்வர் டி.கே.சிவகுமார் வெள்ளிக்கிழமை ‘அரசு உங்கள் வீட்டு வாசலில்’ என்ற திட்டத்தை உறுதி செய்வதற்காக பல்வேறு துறைகளின் அதிகாரிகளுடனான சந்திப்பு நடைபெற்றுள்ளது.
ஒரே நேரத்தில் இரண்டு முதல் மூன்று சட்டமன்றத் தொகுதிகளை ஒருங்கிணைத்து 10 நாட்களுக்கு குறை தீர்க்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்றார். மக்கள் தங்கள் மேல்முறையீடுகள் அல்லது மனுக்களை சமர்ப்பிக்க முடியும், ஆனால் மேல்முறையீட்டை சமர்ப்பிக்க ஆதார் அட்டை அல்லது பான் அட்டையை காண்பிப்பதை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது மக்களின் கோபத்தை அதிகரிக்க செய்யக் கூடும்.
“தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் முறையீடுகளுடன் எங்களிடம் வருகிறார்கள். மக்கள் அரசாங்கத்தின் வீட்டு வாசலுக்கு வருவதை விட, அரசு மக்கள் வீட்டின் வாசலுக்கு கொண்டு செல்லும் நோக்கில் இந்த குறை தீர்க்கும் திட்டம் உள்ளது” என்று டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.
பெங்களூரு போன்ற பெரிய நகரத்தில் ஒரு நிகழ்ச்சியை நடத்துவது பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சுமையை அதிகரிக்கும். எனவே ராம்நகர் போன்ற நகரங்களில் இந்த நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம். ஒவ்வொரு இரண்டு முதல் மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரு நிகழ்ச்சி நடத்தப்படும்.
தேதிகள் மற்றும் இடங்கள் பின்னர் விளம்பரப்படுத்தப்படும். நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் உணவு ஏற்பாடுகள் செய்யப்படும்.
நிகழ்ச்சியின் அமைப்பு குறித்து சிவகுமார் கேட்டதற்கு, “பதிவு செய்து அதன்பிறகு மேல்முறையீடுகள் பெறப்படும். பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் நேரில் வந்து குறைகளை கேட்டறிவார்கள். சட்டங்கள், விதிமீறல்கள் குறித்த புகார்கள் இருந்தால் அதற்காக‌ தனி ஏற்பாடு செய்கிறோம் என்றார்.