10 லஞ்ச அதிகாரிகள் சிக்கினர்

பெங்களூர் : ஜனவரி 31 – மைசூர் , மண்டியா மற்றும் விஜயநகர உட்பட மாநிலத்தின் 40க்கும் மேற்பட்ட பகுதிகளில் இன்று அதிகாலை முதலே ஒரே நேரத்தில் சோதனைகளில் ஈடுபட்டுள்ள லோகாயுக்தா அதிகாரிகள் 10 ஊழல் அதிகாரிகளை வலையில் சிக்கவைத்திருப்பதுடன் இவர்களிடமிருந்து பெருமளவிலான ரொக்கம் மற்றும் நகைகளை கைப்பற்றியுள்ளதாக தெரிகிறது. லஞ்சம் , அத்துமீறல் , மற்றும் சட்டத்துக்கு புறம்பாக சொத்து சேர்த்தது ஆகிய பல குற்றச்சாட்டுகள் தொடர்பாக கிடைத்த நம்பகமான தகவல்களை வைத்து 10 அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடத்தியுள்ள சோதனைகளில் கோடி கணக்கான ரொக்கம் , தங்கம் வெள்ளி , நகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மைசூரில் முடா உதவி செயல் பொறியாளர் யஞ்சேந்திராவுக்கு சொந்தமான வீடு மற்றும் ஜே பி நகரில் உள்ள வீடு, மற்றும் கே ஆர் நகரின் அவருடைய சகோதரர் வீடுகளில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. மைசூர் லோகாயுக்தா எஸ் பி சுரேஷ் பாபு தலைமையில் நடந்து வந்த சோதனைகள் இன்று பிற்பகல் வரை தொடர்ந்துள்ள நிலையில் வருமானத்துக்கும் அதிகமாக இவர் 100 சதவிகதத்திற்கும் அதிக அளவில் அக்கிரம சொத்து சேர்த்திருப்பது தெரியவந்துள்ளது . இதே போல் துமகூருவில் கே ஆர் ஐ டி எல் செயல் பொறியாளர் ஹனுமந்தராயப்பா என்பவரின் வீடு , அலுவலகம் , மற்றும் பண்ணை வீட்டில் சொத்தை மேற்கொண்டுள்ள லோகாயுக்தா அதிகாரிகள் இவருக்கு சொந்தமான சிரா கேட்டில் உள்ள வீடு , கொரடகெரேவில் உள்ள அலுவலகம், மற்றும் மதுகிரியில் உள்ள பண்ணை வீடு ஆகியவற்றில் சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர். இதே வேளையில் பெல்லாரியின் பி ஜி மைய இயக்குனர் வீட்டிலும் லோகாயுக்தா சோதனைகள் நடந்து வருகிறது. வி எஸ் கே பல்கலைக்கழகத்தின் நந்தி ஹள்ளி பிஜி மைய இயக்குனர் பேராசிரியர் ரவி அவருக்கு சொந்தமான பெல்லாரியில உள்ள நேரு காலனியின் அபார்ட்மெண்டில் லோகாயுக்தா அதிகாரி ரவி தலைமையில் சோதைகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஹாசனில் வருமானத்தை விட அதிகளவு சொத்து சேர்த்துள்ள குற்றத்திற்காக உணவு துறை அதிகாரி ஜெகநாத் வீடு மற்றும் அலுவலகங்கங்களில் லோகாயுக்தாவினர் சோதனை மேற்கொண்டுள்ளனர் . ஜெகநாதன் சகோதரர் கிரண் ரியல் எஸ்டேட் தொழிலதிபராக இருக்கும் நிலையில் அவர் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனைகள் நடந்து வருகிறது. லோகாயுக்தா எஸ் பி மல்லிக் அத்தலைமையில் டி வொய் எஸ் பி திருமலேஷ் , இன்ஸ்பெக்டர்கள் பாலு , ஷில்பா , ஆகியோர் இந்த சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர். மண்டியாவில் பொது பனி துறை அலுவலக செயல் பொறியாளர் ஹர்ஷா என்பவர் வீட்டிலும் சோதனைகள் நடந்து வருகிறது. மண்டியா உட்பட ஹர்ஷாவுக்கு சொந்தமான சுமார் 6 இடங்களில் ஒரே நேரத்தில் லோகாயுக்தா அதிகாரிகள் சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர். இதில் பல கோடி கணக்கான அக்கிரம சொத்து ஆவணங்கள் சிக்கியுள்ளன. விஜயநகர மாவட்டத்தின் நாகு இடங்களில் லோகாயுக்தா அதிகாரிகள் சோதனைகள் நடத்தி இருப்பதுடன் பெஸ்காம் துறை உதவி பொறியாளர் பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான நான்கு இடங்களில் சோதனைகள் நடத்தியுள்ளனர். ஹோசகோட்டேயில் மூன்று வீடுகள் , கொப்பலா மாவட்டத்தில் ஒரு வீதி ஆகியவற்றில் லோகாயுக்தா பி ஐ ராஜேஷ் லமானி மற்றும் சுரஷ் ஆகியோர் தலைமையில் சோதனைகள் நடந்துள்ளது. பாஸ்கர் பணியாற்றிய ஹகரிபொம்மனஹள்ளியில் உள்ள பெஸ்காம் அலுவலகத்திலும் சோதனைகள் நடந்து வருகிறது. இதே போல் சாமராஜநாகரில் குடி நீர் மற்றும் சாக்கடை பராமரிப்பு துறை பொறியாளர் பி ரவிக்குமாருக்கு சொந்தமான கொள்ளேகால் அலஹள்ளி கிராமத்தில் உள்ள வீட்டிலும் சோதனைகள் நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் தான் இவர் ஹுணசூரு நகரிலிருந்து சாமராஜ நகருக்கு இவர் மாற்றலாகியுள்ளார். சிக்கமகளூரில் சி டி ஓ , நேத்ராவதி , கோப்பலாவில் வனத்துறை அதிகாரி ,ரேணுகாம்மா , மங்களூரில் பெஸ்காம் அதிகாரி சாந்தகுமார் ஆகியோர் வீடுகளிலும் இந்திரு அதிகாலை முதல் லோகாயுக்தா போலீசார் சோதனைகளில் ஈடு பட்டுள்ளனர்.