1000 பார் ஓட்டல்களுக்கு நோட்டீஸ்

பெங்களூரு, ஏப். 20: மக்களவைத் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், காலவரையறை தாண்டி திறக்கப்பட்ட, மதுபானங்களை விற்பனை செய்ததாக மாநகரில் உள்ள பார்கள், உணவகங்களுக்கு தேர்தல் அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
1,000க்கும் மேற்பட்ட பார்கள் மற்றும் உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் அதிகாரிகள், காலவரையறைக்கு மேல் பார்களை திறந்துள்ளதுடன், பதிவு செய்யாமல் மதுபானம் விற்பனை செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தேர்தலையொட்டி, பார்கள் மற்றும் உணவகங்கள் சில விதிமுறைகளை கடைபிடிக்க தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இதேபோல், நகரில் உள்ள பார்கள் மற்றும் உணவகங்கள், நேரம் முடிந்தாலும், மதுக்கடை திறந்து வியாபாரம் செய்து வருகின்றனர். விதிகளுக்கு எதிராக செயல்படுகின்றனர்.
இதனால் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்து பார்கள் மற்றும் உணவகங்களுக்கு நோட்டீஸ் வழங்கினர். எம்ஆர்பி கடைகளும் விதிகளை மீறி நடந்து வருகின்றன. சட்ட விரோதமாக மது கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கலால் துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி சில பார்களை மூட உள்ளனர்.இந்நிலையில், நகரின் பல்வேறு சோதனைச் சாவடிகளில் ரூ.2.98 கோடி மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விதிகளை மீறும் மதுக்கடைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • பார், உணவகங்கள் மீது நடவடிக்கை
  • எம்.ஆர்.பி, விதி மீறல்
  • சோதனைச் சாவடிகளில் ரூ.2.95 கோடி மதுபாட்டில்கள் பறிமுதல்