108 அடி உயர கெம்பே கவுடா வெண்கல சிலை திறப்பு

பெங்களூர்: நவம்பர். 11 –
பெங்களூரின் சர்வ தேச விமானநிலையத்தில் பிரதமர் நரேந்திர மோதி பெங்களூரின் நிறுவனரான நாட பிரபு கெம்பேகௌடாவின் 108 அடி உயர புனித வெண்கல சிலையை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். பெங்களூரின் கெம்பேகௌடா சர்வ தேச விமான நிலையத்தில் பெங்களூரை நிறுவிய நாட பிரபு என கன்னடர்களால் கொண்டாடப்படும் கெம்பேகௌடாவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் கர்நாடக அரசு 108 அடி உயர வெண்கல சிலையை நிறுவியது . இந்த சிலையை இன்று காலை திறந்து வைத்த பிரதமர் மோதி பெங்களூரின் வளர்ச்சியை நினைவு கூர்ந்தார். நாட பிரபு கெம்பேகௌடாவின் சிலை அருகில் உருவாக்கப்பட்டுள்ள தீம் பூங்காவையும் பிரதமர் திறந்து வைத்தார்.
கெம்பேகௌடாவின் சிலை தமிழகத்தின் காஞ்சியில் உருவாக்கப்பட்டிருப்பதுடன் 90 அடி சிலையை 18 அடிகள் உயர சிமெண்ட் பீடத்தின் மீது நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை நிறுவ 100 டன் இரும்பு , பீடத்திற்கு 120 டன் உருக்கு ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளது . மாநிலத்திலேயே மிக அதிக உயரம் கொண்ட சிலை இதுவாகியிருப்பதுடன் இதற்க்கு வளர்ச்சியின் சிலை என பெயரிடப்பட்டுள்ளது. இன்று காலை பெங்களூருக்கு வந்திறங்கிய பிரதமர் முதலாவதாக எம் எல் ஏக்கள் வளாகத்தில் உள்ள தூய கனகதாசர் மற்றும் மகரிஷி வாலமீகி ஆகியோர் சிலைகளுக்கு மலரஞ்சலி செலுத்தினால் பெங்களூர் வந்த பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் முதலமைச்சர் கவர்னர் மற்றும் மந்திரிகள் வரவேற்றனர் பெங்களூரில் மோடி சென்ற சாலை நேடுக்க பிஜேபி தொண்டர்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர்.