11,136 தூய்மை பணியாளர்கள் நிரந்தரம்: முதல்வர்

பெங்களூர்,நவ.6-கர்நாடக மாநிலத்தில் 11,136 துப்புரவு ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று தெரிவித்தார்.
மாநிலத்தின் 2 மற்றும் 3-வது அடுக்குகளில் உள்ள பெங்களூரு மற்றும் பெங்களூருக்கு வெளியே உள்ள நகர்ப்புறங்களில் உள்ள தூய்மை ஊழியர்களை அரசு ஊழியர்களாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
பேடராயனபுரா சட்டமன்றத் தொகுதியில் டாக்டர்: பி.ஆர். அம்பேத்கர் ஏரி பூங்கா பூங்காவின் பெயர் சூட்டும் விழாவையும், அம்பேத்கர் பவனையும் முதல்வர் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசும் போது துப்புரவு ஊழியர்களின் அவசரகால நிதி 2 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இவர்களை ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டு அதன் பரிந்துரையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோர் நலனையே அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றார்.
புத்தர் அறிவின் சின்னம். கௌதம புத்தர் தனது ராஜ்ஜியத்தைத் துறந்து, அறிவைப் பெற்று, சமூக மற்றும் மத விழுமியங்களை உலகுக்குப் போதித்தார். அம்பேத்கர் புத்தரின் வழியைப் பின்பற்றி சுதந்திர இந்தியாவில் அனைவருக்கும் சம உரிமை அளித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார் என்று முதல்வர் பேசினார்.நாட்டில் சமத்துவம், ஒற்றுமை, ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளது. நவீன இந்திய ஜனநாயகத்தின் தந்தை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர். அரசியலமைப்பை உருவாக்கிய மகாத்மாவை நாம் எப்போதும் நினைவுகூர வேண்டும் என்றார்.