114 மெட்ரிக் டன் ஆக்சிஜன் – 31வது ரயில் வந்தது

பெங்களூரு, ஜூன் 11- மாநிலத்தில் தற்போதுள்ள ஆக்சிஜென் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களில் இருந்து தொடர்ந்து ஆக்ஸிஜன்கள் வந்தபடி உள்ளன. அந்த வகையில் இன்று 114 மெட்ரிக் டன் ஆக்சிஜென் ஏற்றிய 31 வது ரயில் குஜராத்திலிருந்து இன்று நகருக்கு வந்தது. இதன் வாயிலாக 3 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜென் நகருக்கு வந்துள்ளது. குஜராத்தின் ஜாம் நகரிலிருந்து 114 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை ஏற்றி பெங்களூருவுக்கு இன்று காலை 9. 30 மணிக்கு பெங்களூரு வந்து சேர்ந்ததாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. குஜராத் ஜார்க்கண்ட் , ஒரிசா உட்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து கடந்த ஒரு மாதமாக தினமும் தொடர்ந்து சராசரி 120 போகிகளில் ஆக்ஸி வருவதில் இதற்கு ரயில்வே துறையும் கை ஜோடித்து ஆக்ஸிஜன்கள் சப்ளை செய்து வருகிறது என்றும் ரயில்வே தன அறிக்கையில் தெரிவித்துள்ளது. கர்நாடக மட்டுமின்றி தமிழ்நாடு ஆந்திரா ,உத்தரபிரதேசம் , ஹரியானா ,டெல்லி உட்பட பல மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இதில் கர்நாடகா குஜராத் உட்பட சில மாநிலங்களுக்கு கூடுதல் ஆக்சிஜென் அனுப்பப்பட்டு வருவதாகவும் ரயில்வே தெரிவித்துள்ளது.