1,170 வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்வு

புதுடெல்லி: ஜூலை 9- இந்த ஆண்டு கோடை விடுமுறையில் ​​உச்ச நீதிமன்றம் 1,170 வழக்குகளை தீர்த்து வைத்து சாதனை படைத்துள்ளது.கோடை விடுமுறைக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் நேற்று முதல் வழக்கம்போல் செயல்படத் தொடங்கியது. அடுத்த சிலவாரங்களில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுகள் தீர்ப்புகளை அறிவிக்க உள்ளன.நிர்வாகப் பணிகளைக் கையாளுவது, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் மாநாடுகளில் பங்கேற்பது ஆகிய பணிகளுக்கு மத்தியிலும் தலைமை நீதிபதி சந்திரசூட், தனது தலைமையிலான அமர்வுகளில் ஒத்திவைக்கப்பட்ட 18 வழக்குகளுக்கு தீர்ப்புகளுக்கான பணியில் ஈடுபட்டு வருகிறார். இதுபோல பிற நீதிபதிகள் ஒத்திவைக்கப்பட்ட 190 வழக்குகளில் தீர்ப்புகளுக்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்.நீண்ட கோடை விடுமுறை என்ற ஆங்கிலேயர் கால மரபு உச்ச நீதிமன்றத்தில் இப்போதும் தொடர்கிறது. ஆனால் முதன்முறையாக இந்த ஆண்டு கிட்டத்தட்ட இரண்டுமாத இடைவெளியில் 20 அமர்வுகள் அமைக்கப்பட்டு, இரு தரப்பு ஒப்புதலுடன் பல வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன.
நிர்வாகப் பணிகளைக் கையாளுவது, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் மாநாடுகளில் பங்கேற்பது ஆகிய பணிகளுக்கு மத்தியிலும் தலைமை நீதிபதி சந்திரசூட், தனது தலைமையிலான அமர்வுகளில் ஒத்திவைக்கப்பட்ட 18 வழக்குகளுக்கு தீர்ப்புகளுக்கான பணியில் ஈடுபட்டு வருகிறார். இதுபோல பிற நீதிபதிகள் ஒத்திவைக்கப்பட்ட 190 வழக்குகளில் தீர்ப்புகளுக்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்.நீண்ட கோடை விடுமுறை என்ற ஆங்கிலேயர் கால மரபு உச்ச நீதிமன்றத்தில் இப்போதும் தொடர்கிறது. ஆனால் முதன்முறையாக இந்த ஆண்டு கிட்டத்தட்ட இரண்டுமாத இடைவெளியில் 20 அமர்வுகள் அமைக்கப்பட்டு, இரு தரப்பு ஒப்புதலுடன் பல வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன.