12 பிஜேபி எம்எல்ஏக்கள் போர்க்கொடி

பெங்களூர், ஜன .13 – கர்நாடக மந்திரிசபை இன்று மாலை விஸ்தரிக்கப்பட்டது. 7 பேர் புதிதாக அமைச்சர்களாக பதவியேற்றனர்.இதற்கிடையே அமைச்சர் பதவி கிடைக்காத 12 பிஜேபி எம்எல்ஏக்கள் பகிரங்கமாக தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். பசவனகவுடா பாட்டீல் யத்னால் விஸ்வநாத், திப்பரெட்டி, ராம்தாஸ், மகேஷ் குமத்தள்ளி, அரவிந்த் பெல்லாட், சதீஷ் ரெட்டி, நேரு ஒலேகர், ரேணுகாச்சார்யா, சோமசேகர் ரெட்டி, கருணகர ரெட்டி. அபய் பாட்டீல் .உள்ளிட்டோர் தங்களுக்கு மந்திரி பதவி ஏன் வழங்கவில்லை என்ன காரணம் என்று சரமாரியாகக் கேள்விகள் எழுப்பி உள்ளனர் இதனால் கர்நாடக மாநில பிஜேபியில் பூகம்பம் வெடித்துள்ளது