12 மாவட்டங்களில் வெள்ள அபாயம்: தமிழக முதல்வர் அவசர ஆலோசனை

சென்னை: ஆக. 5
காவிரியில் 2.10 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மக்கள் எதிர்பாராத நேரத்தில் தண்ணீர் வெளியேற்றும் அளவை அதிகப்படுத்தக்கூடாது. குறிப்பாக இரவு நேரத்தில் தண்ணீர் அளவினை வெளியேற்றுவதை அதிகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை கூட்டத்தில் 12 மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை மற்றும் மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் அதிகப்படியான வெள்ளநீரினை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து திருச்சி, கரூர், சேலம், நாமக்கல், தஞ்சாவூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ஈரோடு, திருவாரூர், கடலூர், திருப்பூர் ஆகிய கலெக்டர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடந்தது.
தென்மேற்கு பருவ மழை தொடங்கியதில் இருந்து தமிழ்நாட்டில் தொடர்ந்து பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த 1.6.2022 முதல் 3.8.2022 முடிய தமிழ்நாட்டில் 249.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது