123 பெண்கள் மட்டுமே போட்டி

புதுடெல்லி: ஏப்.30:
மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 1,352 வேட்பாளர்களில் 123 பேர் மட்டுமே பெண்கள் என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) தெரிவித்துள்ளன.
இதுகுறித்து ஏடிஆர் வெளியிட்ட அறிக்கை: 3-ம் கட்ட மக்களவை தேர்தல் மே 7-ம் தேதி நடைபெறவுள்ளது. அதில் போட்டியிடும் 1,352 வேட்பாளர்களில் 9 சதவீதம் (123 பேர்) மட்டுமே பெண்கள். மேலும், 18 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன.
அதனடிப்படையில், 244 வேட்பாளர்களில் 5 பேர் மீது கொலை குற்றச்சாட்டும், 24 பேர் மீது கொலைமுயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 38 வேட்பாளர்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. 17 பேர் மீது வெறுப்புப்பேச்சு தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தில் வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள சுய பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்ததில் இந்த தகவல்கள் தெரியவந்தன. இவ்வாறு ஏடிஆர் தெரிவித்துள்ளது.