13 ஆயிரத்தை நெருங்கிய தினசரி கொரோனா பாதிப்பு

புதுடெல்லி, ஜூன். 17 –
இந்தியாவில் கொரோனா தொற்று நாள்தோறும் உயர்ந்து வருகிறது. அந்தவகையில் நேற்று முன் தினம் 8,822, நேற்று 12,213 ஆக இருந்த கொரோனா பாதிப்பு 12,847 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,32,57,730 லிருந்து 4,32,70,577 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 7,985 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,26,74,712 லிருந்து 4,26,82,697 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்தனர்.
இதுவரை 5,24,817 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 58,215 லிருந்து 63,063 ஆனது. இந்தியாவில் இதுவரை 195.84 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 15,27, 365 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை வெளியிட்டிருக்கிறது.