13 காங்கிரஸ் தலைவர்களுக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன்

பெங்களூரு, ஜன.7-கொரோனா விதிகளை மீறி வருமான வரித்துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய 13 காங்கிரஸ் தலைவர்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
முன்னாள் முதல்வர் சித்தராமையா, கேபிசிசி தலைவர் டி.கே.சிவக்குமார், டாக்டர்.ஜி.பரமேஷ்வர், யு.டி.காதர், வீரப்ப மொய்லி, கே.ஜே.ஜார்ஜ், ரிஸ்வான் அர்ஷத், டி.பி.ஜெயச்சந்திரா, எம்.நாராயணா ஆகியோர் ஜனவரி 9ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது..சுவாமி, பரமேஷ்வர் நாயக், சலீம் அகமது, எம்எல்ஏ சௌமியா ரெட்டி, கேபிசிசி இளைஞர் பிரிவு தலைவர் நலபாட் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்றது கண்டித்து, கோவிட் சமயத்தில் காங்கிரஸ் தலைவர்கள் வருமான வரித்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா வழிகாட்டுதல்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர்கள் மீது போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் தற்போது சம்மன் அனுப்பியுள்ளது.