13 தீவிரவாதிகள் கைது

பெங்களூர்,டிசம்பர். 9 –
கர்நாடக மாநிலம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 44 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். பயங்கரவாத தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டிய 13 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதாக முதல் கட்ட தகவல் தெரிவிக்கிறது
நாடு முழுக்க பயங்கரவாத செயல்களில் ஈடு பட உலகளவிலான பயங்கரவாத இயக்கம் ஐசிஸ் சதி திட்டம் தீட்டியுள்ள நிலையில் தேசிய புலானய்வு குழு ( என் ஐ ஏ ) அதிகாரிகள் கர்நாடகா மற்றும் மஹாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் 44க்கும் அதிகமான இடங்களில் சோதனைகள் மேற்கொண்டுள்ளனர். என் ஐ ஏ அதிகாரிகள் கர்நாடகத்தில் ஒரு இடத்திலும் புனேவில் 2, தானே கிராமாந்தர பகுதியில் 31, தானே நகரில் ஒன்பது மற்றும் பாயந்தரில் ஒரு இடத்திலும் சோதனைகள் மேற்கொண்டுள்ளனர். ஐசிஸ் பயங்கரவாத சதி திட்டம் தொடர்பாக இதுவரை 13 சந்தேகத்துக்குரிய தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதே போல் பெங்களூரில் உருது பள்ளிக்கூடம் நடத்திவந்த சந்தேகத்துக்குரிய தீவிரவாதியையும் ஏன் ஐ ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகத்துக்குரிய தீவிரவாதியிடமிருந்து 16 லட்சத்து 42 ஆயிரம் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட தீவிரவாதி தகவல் தொடர்பாளராக பணியாற்றிவந்துள்ள நிலையில் புனேவில் நடத்திய சோதனைகளில் தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். என் ஐ ஏ சோதனைகள் நடத்தியுள்ள மொத்த இடங்களில் கர்நாடகாவில் ஒரு இடம் புனேவில் இரண்டு இடங்கள் , தானே கிராமத்தார் பகுதியில் 31 இடங்கள் மற்றும் தானே nagar பகுதியில் 9 இடங்கள் மற்றும் பாய்ந்தரில் ஒரு இடத்திலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் பயங்கரவாத மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் முற்பட்டுள்ள என் ஐ ஏ இது விஷயமாக தீவிர சோதனைகள் மேற்கொண்டு வருகிறது. நகரின் பிரேசர் டவுனில் உள்ள அலி அபபாஸ் என்பவனின் வீட்டில் என் ஐ ye அதிகாரிகள் சோதனைகள் மேற்கொண்டுள்ளனர். மும்பை நகரை சேர்ந்த அலி அபபாஸ் நகரின் டேனரி வீதியில் உருது பள்ளிக்கூடம் நடத்திவந்துள்ளான். கடந்த 2018ல் வீட்டு மனை வாங்கிய அலி அபபாஸ் மருத்துவராகியுள்ள தன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தான். மஹாராஷ்டிராவில் கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதியுடன் தொடர்பில் இருந்த அலி அபபாசின் தொலைபேசி மற்றும் கணினிகள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறது . அல் கொய்தா மற்றும் ஐசிஸ் உட்பட நாட்டில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத குழுக்களுக்கு பணியாற்ற உறுதிபூண்டுள்ள இந்த தீவிரவாதிகள் பயங்கரவாத குழுக்களை அமைத்திருப்பது குறித்து தகவல்கள் அறிந்துள்ள தேசிய புலனாய்வு துறை இந்த சோதனைகளை நடத்தியுள்ளது. பீஹார் , உத்தரபிரதேசம் , மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய இடங்களில் ore நேரத்தில் சோதனைகள் மேற்கொண்டுள்ள என் ஐ ஏ அதிகாரிகள் கர்நாடகாவின் பெல்லாரியிலும் ஒருவனை கைது செய்துள்ளனர். பெல்லாரியில் கைது செய்யப்பட்டவன் மஹேந்திரா என அடையாளம் காணப்பட்டுள்ளது . இவனிடமிருந்து பெருமளவில் கள்ள நோட்டுகள் , நோட்டு தயாரிக்கும் காகிதம் , அச்சு எந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவன் 500, 200 , மற்றும் 100 ருபாய் முக மதிப்புள்ள நோட்டுகளை தயாரித்து வந்துள்ளான் என தெரிய வந்துள்ளது. தேசிய புலனாய்வு துறை ஒரே நேரத்தில் நான்கு மாநிலங்களில் சோதனைகள் மேற்கொண்டுள்ள நிலையில் கள்ள நோட்டுகள் அச்சடிப்பது குறித்து தகவல்கள் அறிந்தே இந்த சோதனைகளில் ஈடுபட்டுள்ளது. இதில் குற்றவாளிகள் கையும் களவுமாக சிக்கியுள்ளனர். எல்லை பகுதிகளில் இருந்து நாட்டுக்குள் கள்ள நோட்டுகள் வருவது குறித்து சந்தேகம் அடைந்த என் ஐ ஏ அதிகாரிகள் இந்த நோக்கில் கடந்த நவம்பர் 24 அன்று விசாரணையை துவங்கினர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு உள்நாட்டிலேயே கள்ள நோட்டுகள் அச்சிடப்படுவது குறித்து தகவல்கள் கிடைத்தது. தீவிர ஆய்வுக்கு பின்னர் என் ஐ ஏ அதிகாரிகள் மகாராஷ்டிராவின் கொல்லாபுரா மாவட்டத்தின் ராகுல் தானாஜி பாட்டில் என்ற ஜாவீத் , உத்தரபிரதேசத்தில் ஷாஜஹான்புரா மாவட்டத்தை சேர்ந்த விவேக் டாகூர் என்ற ஆதித்யா சிங்க் மற்றும் கர்நாடகாவின் பெல்லாரியை சேர்ந்த மஹேந்தர் ஆகியோர் மீது நோட்டம் வைத்து இவர்களை தற்போது கைது செய்துள்ளனர்.