13 மாநிலங்களில் என்.ஐ.ஏ. சோதனை: 100 பேர் கைது

Nia raied at mm road fazer town

புதுடெல்லி : செப்டம்பர் . 22 -பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டுதல், தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆள் சேர்த்தல் உள்ளிட்ட தேச விரோத செயல்களில் ஈடுபட்டு வந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பின் நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு படையினர் நாடு முழுவதும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இது போல் எஸ்டிபிஐ அமைப்பை சேர்ந்தவர்கள் வீடுகளிலும் ரெய்டு நடக்கிறது.
கேரளா கோழிக்கோடு, டில்லி, மும்பை, அசாம், தெலுங்கானா, பெங்களூரூ, லக்னோ, சென்னை, கோல்கட்டா உள்ளிட்ட முக்கிய நகரங்கள் உள்பட 100 க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த ரெய்டு நடந்து வருகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட இடங்களில் இந்த ரெய்டு நடக்கிறது. பேகம்பூர், நெல்பேட்டை , கோரிப்பாளையம், வில்லாபுரம் , யாகப்பாநகர், ஏர்வாடி மதரசாவிலும் சோதனை நடந்து வருகிறது. கோவை கரும்புக்கடை பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.சில இடங்களில் இதன் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இது வரை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் 100 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கிறது .