புதுடெல்லி : நவம்பர். 12 – சுமார் 130 கி மீ வேகத்தில் சென்றுகொண்டிருந்த ரயிலை ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டு நிறுத்தியதில் இந்த அதிர்வில் இரண்டு பயணியர் இறந்துள்ள சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது.
டெல்லிக்கு சென்றுகொண்டிருந்த ரயிலின் ஓட்டுநர் தலைக்கு மேல் உள்ள மின் கம்பி துண்டாகியிருப்பதை கண்டு திடீர் என ரயிலை நிறுத்திய அதிர்வில் குறைந்தது இரண்டு பேர் இறந்துள்ளதாக மேற்கு பிரிவு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
இறந்தவர்களின் அடையாளங்கள் இன்னும் தெரியவரவில்லை. கோமோக் மற்றும் கோடெர்மா ஆகிய ரயில் நிலையங்களுக்கிடையில் இந்த விபத்து நடந்துள்ளது. நேற்று பிற்பகல் 12.05 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பூரி புதுடெல்லிக்கிடையேயான புருஷோத்தம எக்ஸ்பிரஸ் ரயில் மணிக்கு 130 கிமீ வேகத்தில் சென்று கொண்டிருந்தபோது மின் கம்பி துண்டிக்கப்பட்டதால் ஓட்டுநர் ரயிலை நிறுத்த அவசர பிரேக் போட்டுள்ளார். பின்னர் இந்த ரயிலை டீசல் என்ஜின் வாயிலாக மீட்கப்பட்டு பின்னர் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மின் சப்லை திடீரென நிறுத்தப்பட்டதால் ரயிலை நிறுத்த அவசர பிரேக் போடவேண்டிவந்தது என்றும் இந்த அதிர்வில் இரண்டு பேர் உயிரிழந்தயிருப்பதாகவும் தன்பாத் பிரிவு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.