13,000 வழக்கு தள்ளுபடி : சுப்ரீம் கோர்ட் அதிரடி

புதுடில்லி, செப். 17- நிலுவையில் இருந்த 13 ஆயிரம் வழக்குகளை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.உச்ச நீதிமன்றத்தில் ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. நிலுவை எண்ணிக்கையை குறைக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
இதன்படி, 2014க்கு முன் தாக்கல் செய்யப்பட்டு, விசாரணையில் எந்த முன்னேற்றமும் இன்றி தேங்கிக் கிடந்த 13 ஆயிரத்து 147 வழக்குகளை தள்ளுபடி செய்து நீதிமன்ற பதிவாளர் சிராக் பானு சிங் நேற்று உத்தரவிட்டார். இதில், 1987ல் தாக்கல் செய்த ஒரு வழக்கும் உள்ளது.
கடந்த 1ம் தேதி நிலவரப்படி, உச்ச நீதிமன்றத்தில் 70 ஆயிரத்து 310 வழக்குகள் நிலுவையில் இருந்தன.