14ம் தேதி முதல் ஜனதா தளம் எஸ் கட்சியின் பஞ்சரத்ன யாத்திரை

பெங்களூர்: நவம்பர். 12 – மழையால் தள்ளிவைக்கப்பட்ட ம ஜ தாவின் பஞ்சரத்ன யாத்திரை நவம்பர் 14 முதல் மீண்டும் துவங்க உள்ளது. நவம்பர் ஒன்று அன்று கோலாரின் முலபாகலில் பஞ்சரத்ன யாத்திரை துவங்கப்பட்ட நிலையில் மழையால் பின்னர் அது நிறுத்திவைக்கப்பட்டது . தற்போது நவம்பர் 14 அதாவது வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் இந்த யாத்திரை துவங்க உள்ளது. ஏற்கெனவே முடிவு செய்தததன்படி முலபாகில் சட்டமன்ற தொகுதியிலிருந்து இந்த ரத யாத்திரை துவங்க இருப்பதுடன் இந்த யாத்திரை வரும் டிசம்பர் 6 வரை நடக்க உள்ளது. இந்த ரத யாத்திரையின் போது ம ஜ தா கட்சி அந்தந்த தொகுதிகளில் வேட்பாளர்கள் பெயர்களை அறிவிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. அதே போல் அறிவிக்கப்படும் வேட்பாளர்கள் தேர்தலில் ஜெயித்த பின்னர் எக்காரணம் கொண்டும் கட்சி மாறுவதில்லை என உறுதிமொழியை எடுக்க வேண்டி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பஞ்சரத யாத்திரையின் போது முன்னாள் முதல்வர் ஹெச் டி குமாரசாமி கிராமங்களில் தங்கும் நிகழ்ச்சிகளும் உள்ளது. இந்த யாத்திரை கோலார் , சிக்கபள்ளாபுரா , பெங்களூர் கிராமாந்தரம் , துமகூரு , மாவட்டங்களின் சட்டமன்ற தொகுதிகளில் செல்ல இருப்பதுடன் சட்டமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடருக்கு பின்னர் 2வது கட்ட பஞ்சரத்ன யாத்திரை நடக்கும் என ம ஜ தா வட்டாரங்கள் தெரிவித்தன.