14 கிலோ போதைப் பொருள் பறிமுதல் நைஜீரிய ஆசாமி கைது

பெங்களூர்: ஜூன். 10 – போதை பொருள்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வரும் வட கிழக்கு பிரிவு போலீசார் மாணவர்களுக்கு போதை பொருள்களை விற்பனை செய்து வந்த வெளிநாட்டு பிரஜை ஒருவனை கைது செய்துள்ளனர். நைஜீரியாவை சேர்ந்த ஜான் ஆப்ரஹாம் என்பவன் கைது செய்யப்பட்ட குற்றவாளி. இவனிடமிருந்து 1.4 கிலோ எம் டி எம் ஏ மாத்திரைகள் , 6 கிலோ கஞ்சா , 7 மொபைல் போன்களாகியவை கைப்பற்றப்பட்டதாக டி சி பி டாக்டர் அனூப் ஏ ஷெட்டி தெரிவித்தார் . எலஹங்காவின் பாலனஹள்ளி பண்ணை வீட்டில் போதை பொருளகள் சேகரித்து வைத்திருந்த குற்றவாளி அவற்றை தொழிலதிபர்கள் , ஐ டி பி டி ஊழியர்கள் , மற்றும் மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளான். இது குறித்து நம்பகமான தகவலின் பேரில் குற்றவாளி வசித்து வந்த வீட்டில் சோதனை மேற்கொண்ட எலஹங்கா போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு குற்றவாளியை கைது செய்துள்ளனர்.
இவனுக்கு போதை பொருள்களை விநியோகித்து வந்த சக்ரபா என்ற மற்றொரு குற்றவாளி தலைமறைவாயிருப்பதுடன் அவனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக அனூப் ஏ ஷெட்டி தெரிவித்தார் .