14-ம் தேதி வீட்டுமனை தாக்கல் ஆரம்பம்

சென்னை: ஜூன் 11 விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 14-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியின் உறுப்பினராக இருந்தவர் புகழேந்தி. திமுகவை சேர்ந்த இவர், மக்களவை தேர்தல் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், கடந்த ஏப்ரல் 6-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து, விக்கிரவாண்டி எம்எல்ஏ மறைவு குறித்து தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை செயலகம் தெரிவித்தது. தொடர்ந்து, ஏப். 8-ம் தேதி விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. வழக்கமாக, ஒரு மக்களவை அல்லது சட்டப்பேரவை தொகுதி காலியானால், அடுத்த 6 மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
இதற்கிடையில், நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றன. இறுதி கட்ட வாக்குப்பதிவு கடந்த ஜூன் 1-ம் தேதி நடைபெற்றது. இறுதி கட்ட தேர்தலின்போதே, விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்பட்டது.
தேர்தல் ஆணையம் அறிவிப்பு: இந்நிலையில், தமிழகத்தின் விக்கிரவாண்டி உட்பட 7 மாநிலங்களில் 13 சட்டப்பேரவை தொகுதிகளின் தேர்தல் தொடர் பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. அதன்படி, தேர்தல் தொடர்பான அறிவிக்கை வரும்ஜூன் 14-ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டு அன்று முதல் வேட்புமனு தாக்கல்தொடங்குகிறது. மனுக்கள் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜூன் 21-ம்தேதி. மனுக்கள் ஜூன் 24-ம் தேதி பரிசீலிக்கப்படும். போட்டியிட விரும்பாதவர்கள் மனுக்களை வாபஸ் பெற ஜூன் 26-ம்தேதி கடைசி நாள். அன்று மாலையேவேட்பாளர்கள் இறுதிப் பட்டியல் வெளியாகும்.