15 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை

பெங்களூரு, செப்.12- நாடு முழுவதும் 15 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது
நாட்டின் பல பகுதிகளில் சில நாட்களாக இடைவேளை கொடுத்த மழை ,மீண்டும் துவங்கியுள்ளது.
கர்நாடகாவின் கடலோர பகுதிகள் உட்பட மகாராஷ்டிரா உத்தர பிரதேசத்தில் நேற்று மழை பெய்தது.
தற்போது மீண்டும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உத்தரவு பிரதேசத்தின் ஏற்கனவே மழை செவ்வாய்க்கிழமையும் தொடரும்.
இன்று உத்தரப்பிரதேசத்திற்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், பீகார், ஜார்க்கண்ட், வடக்கிழக்கு உள்ளிட்ட சுமார் 15 மாநிலங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
உத்தரகாண்ட் ,இமாச்சல் பிரதேஷ் போன்ற மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்து இருந்தது.
டில்லி , பகுதியில் செவ்வாய்க்கிழமை வானிலை இதமாக இருக்கும். டெல்லியில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மத்திய பிரதேஷ், வட மேற்கு பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சராசரி 76 கிலோ மீட்டர் வரை சுறாவளி சுழற்சி நீடிப்பதாக இந்திய வானிலை கழகம் தெரிவித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கிழக்கு காற்று ஆகியவற்றிற்கு மோதலால் உத்தரப்பிரதேசத்தில் உட்பட கிழக்கு மற்றும் மத்திய இந்தியாவில் கனமழை பெய்யும் சூழ்நிலை உள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் தலைநகர் லக்னோவில் நேற்று 109 மில்லி மீட்டர் மழை பெய்தது. எனவே நிலைக்கட்டுக்குள் வரவில்லை.அடுத்த 24 மணி நேரத்தில் சத்தீஸ்கர் ஒடிசா கிழக்கு மத்திய பிரதேசம் அந்தமான் நிக்கோபார் கடலோர கர்நாடகா மற்றும் கேரளாவில் லேசான மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதே போல் தெலுங்கானா ராஜஸ்தான் வடகிழக்கு மற்றும் சிக்கிம் மாநிலங்களில் சில பகுதிகளில் லேசான மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.கர்நாடகா உள்ளிட்ட மேற்கு மத்திய பிரதேசத்தில் லேசான மழை பெய்யக்கூடும். இன்றும் நாளையும் தலைநகரில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே நாற்பது சதவீதம் மழையற்ற குறை இருந்து வந்தது.