15 லஞ்ச அதிகாரிகள் சிக்கினர்

பெங்களூரு, நவ. 24- கே ஏ எஸ் அதிகாரி உட்பட 15 பேர் ஊழல் ஊழியர்களின் வீடுகளில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு பிரிவு (ஏ சி பி) அதிகாரிகள் கோடிக்கணக்கான மதிப்புள்ள சட்ட விரோத சொத்துக்களை கண்டு பிடித்து இந்த குளிரிலும் அதிகாரிகளை வியர்க்க வைத்துள்ளனர். 8 பேர் எஸ் பி க்கள் , 100 அதிகாரிகள் சேர்த்து மொத்தம் 408 ஊழியர்கள் ஒரே நேரத்தில் 68க்கும் அதிகமான இடங்களில் சோதனைகள் நடத்தி கோடிக்கணக்கான மதிப்புள்ள ரொக்கம் , தங்கநகைகள் , மற்றும் ஆடம்பர பொருட்கள் , மனைகள் , வீடுகள் ஆகியவற்றை பரிசீலித்துள்ளனர். அக்கிரம சொத்து சம்பாதித்துள்ளதாக பல புகார்கள் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து முழு தகவல்களை பெற்று பெங்களூரின் நான்கு அதிகாரிகள் உட்பட 15 ஊழல் அதிகாரிகளுக்கு காலை கடும் குளிரிலும் வியர்கவைத்துள்ளனர். நகரின் கே ஏ எஸ் அதிகாரி நாகராஜ் , எலஹங்கா அரசு மருத்துவமனையின் பிஜுயோ தெரபிஸ்ட் ராஜசேகர் , மாநகராட்சி ஊழியர் மாயண்ணா , மற்றொரு மாநகராட்சி ஊழியர் பாகல்கோட்டவை சேர்ந்த கிரி உட்பட மொத்தம் நான்கு பேர் வீடுகளில் சோதனை செய்துள்ள ஏ சி பி அதிகாரிகள் சோதனை நடத்தியபோது கோடிக்கணக்கான மதிப்புள்ள அக்கிரம சொத்துக்களை கண்டுபிடித்துள்ளதாக ஏ சி பி யின் கூடுதல் போலீஸ் உயர் இயக்குனர் (ஏ டி ஜி பி ) சீமாந்த் குமார் சிங்க் தெரிவித்துள்ளார். மங்களூரு ஸ்மார்ட் சிட்டி செயல் இயக்குனர் பொறியாளர் கே எஸ் லிங்கேகௌடாவின் வீடு அலுவலகம் , மண்டியா ஹெச் எல்பி சி செயல்பொறியாளர் கே ஸ்ரீனிவாசுக்கு சொந்தமான வீடு அலுவலகங்களிலும் சோதனை நடந்துள்ளது. தோடடபள்ளபுராவின் வருவாய்த்துறை அதிகாரி லக்ஸ்மிநரசிம்மய்யா , நிர்மிதி மையத்தின் முன்னாள் திட்ட அதிகாரி வாசுதேவ் , நந்தினி டைரி பொது மேலாளர் பி. கிருஷ்ணா ரெட்டி , கதக் விவசாய துறை இணை இயக்குனர் தி ஏன் ருத்ரேஷப்பா , பைலஹோங்களாவில் பணியாற்றி வந்துள்ள கூட்டுறவு அதிகாரி ஏ கே மஸ்தி கோகாக்கின் உயர் வாகன இன்ஸ்பெக்ட்டர் சதாஷிவ மரலிங்கண்ணவர் , ஹெஸ்கம் க்ரூப் சி பிரிவு ஊழியர் நேதாஜி ஹீரெஜி , ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனைகள் நடந்துள்ளது. 2021 ஜூலை மாதத்தில் ஒய்வு பெற்ற பெல்லாரி சப் இன்ஸ்பெக்ட்டர் கே எஸ் ஷிவானந்தா , எலஹங்கா அரசு மருத்துவமனை பிசியோ தெரபிஸ்ட் ராஜசேகர் , ஜீவர்கி பொது பணித்துறை மூத்த அதிகாரி எஸ் எம் பிராதர் , மாநகராட்சி ஊழியர் மாயண்ணா , உற்பட 15 அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனைகள் நடந்துள்ளது. இந்த சோதனைகளின் போது இவர்களின் வருமானதுக்கு மீறி சம்பாதித்துள்ள நூறு சதவிகிதத்துக்கும் அதிகமான அக்கிரம சொத்துக்கள் மற்றும் கணக்கில் வராத பணங்கள் , கிலோ கணக்கில் தங்க நகைகள் , மனைகள் , வீடுகள் , உறவினர்களின் பெயர்களில் சேர்த்துள்ள சொத்துக்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளது. வலையில் சிக்கியுள்ள ஊழல் அதிகாரிகளின் அலுவலகங்கள் வீடுகள் மற்றும் சொத்துக்கள் குறித்து இன்று அதிகாலைமுதல் நடந்துள்ள சோதனைகல் இன்னமும் தொடர்ந்து நடந்து வருகிறது. கைப்பற்ற பொருட்கள் மற்றும் சொத்துகள் குறித்த விவரங்கள் இன்னும் ஓரிரு நாட்களில் மொத்த மதிப்பீடு செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
@ts = வலையில் சிக்கிய முதலைகள்

  1. கே எஸ் லிங்கேகௌடா ,செயல் பொறியாளர் ஸ்மார்ட் சிட்டி திட்டம் , மங்களூரு 2. ஸ்ரீனிவாஸ். கே. தலைமை பொறியாளர் , ஹெச் எல் பி சி மண்டியா , 3. லக்ஷ்மிகாந்தயா, ரெவின்யூ இன்ஸ்பெக்டர், தொடடபள்ளாபுரா , 4. வாசுதேவ், திட்ட மேலாளர், நிர்மிதி மையம் , பெங்களூரு , 5. பி கிருஷ்ணாரெட்டி ,பொது மேலாளர் நந்தினி டைரி ,பெங்களூர் , 6. தி எஸ் ருத்ரேஷப்பா , இணை இயக்குனர் விவிச்சாய துறை, கதக் ,7. ஏ கே மஸ்தி ,கூட்டுறவு அபிவிருத்தி அதிகாரி ,பைலஹோங்களா , 8. சதாஷிவ மரலிங்கண்ணவர், மூத்த வாகன இன்ஸ்பெக்டர் , கோகாத் , 9. நாதாஜி ஹிராஜி பாட்டில் . சி பிரிவு ஊழியர் ,பெலகாம் பெஸ்காம் , 10. கே எஸ் ஷிவானந்தா , ஓய்வு பெட்ரா துணை பதிவாளர் , பெல்லாரி , 11. ராஜசேகர். பிசியோ தெரபிஸ்ட் , எலஹங்கா அரசு மருத்துவமனை பெங்களூர் , 12. மாயன்ணா , மாநகராட்சி ஊழியர் பெங்களூர் . 13. எள் ஸ் நாகராஜ். சகால ,நிர்வாக அதிகாரி ,பெங்களூர் 14. ஜி வி கிரி டி பிரிவு ஊழியர் ,மாநகராட்சி எலஹங்கா, பெங்களூர் 15. எஸ் எம் பிராதார். இணை பொறியாளர். பொது பணி துறை , ஜீவர்கி