154 டன் ரேஷன் அரிசி மாயம்: கிடங்கு மேலாளர் கைது

ராம்நகர், நவ. 24: உற்பத்தி கூட்டுறவு சங்க (டிஏபிஎம்எஸ்) கிடங்கில் இருந்து ரூ.55.04 லட்சம் மதிப்புள்ள 154 டன் ரேஷன் அரிசி மற்றும் 7 டன் சிறுதானியங்கள் காணாமல் போயியுள்ளன‌.
சம்பவம் குறித்து தாலுகா உணவு ஆய்வாளர் சேத்தன்குமார் அளித்த புகாரின் பேரில் சென்னப்பட்டினா காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, கிடங்கு மேலாளர் சந்திரசேகர் என்பவரை கைது செய்துள்ளனர்.
கிடங்கில் வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருள்களை பரிசோதிக்க உணவு ஆய்வாளர்கள் புதன்கிழமை கிடங்கிற்குச் சென்றபோது, அரிசி காணாமல் போனது தெரிய வந்தது. உடனடியாக இதனை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளன‌ர். தாசில்தார் மகேந்திரன், உணவு மற்றும் பொது வழங்கல் துறை இணை இயக்குனர் ரம்யா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, இரவு போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து கிடங்கின் மேலாளர் கைது செய்யப்பட்டார்.
கிடங்கில் ரூ. 52.49 லட்சம் மதிப்புள்ள அரிசி, ரூ. 2.55 லட்சம் மதிப்புள்ள சிறுதானியங்கள், மொத்தம் ரூ.55.04 லட்சத்திற்கு உணவு பொருள்கள் காணாமல் போயியுள்ளன. இது 67 நியாய விலைக் கடைகளுக்கு விநியோகம் செய்வதற்காக வைக்கப்பட்டு உணவுப் பொருள்கள் என்று உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை இணை இயக்குனர் ரம்யா தெரிவித்தார்.
தற்போது காணாமல் போன‌ அரிசி கடந்த 3 வாரங்களாக மத்திய கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது. இந்த அரிசி உள்ளிட்ட பொருள்கள், மத்திய அரசிடம் இருந்து மாநில அரசு அரிசி கொள்முதல் செய்திருந்த‌து. நவம்பர் மாதத்திற்கான அரிசி உள்ளிட்டவை ஏற்கனவே விநியோகிக்கப்பட்டது. காணாமல் போன‌ அரிசி மற்றும் சிறுதானியம் அடுத்த 2 மாதங்களுக்கு விநியோகம் செய்வதற்காக சேமித்து வைக்கப்பட்டிருந்தது என்றார்.தாலுகா வேளாண்மை உற்பத்தி கூட்டுறவு விற்பனை சங்கம் (டிஏபிசிஎம்எஸ்) கடந்த பத்து ஆண்டுகளாக நியாய விலைக் கடைகளுக்கு ரேஷன் அரிசி விநியோகம் செய்து வருகிறது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள கிடங்கு மேலாளர் சந்திரசேகர், ஒன்றரை ஆண்டுகளாக இங்கு பணியாற்றி வந்தார். இவருடன் சேர்ந்து, செல்வாக்கு மிக்க சிலர், சுமார் 3 ஆயிரம் அரிசி, சிறுதானியா மூட்டைகள் திருட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து வழக்கு பதிந்த போலீசார் அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகின்றனர்.மாவட்ட ஆட்சியர் டாக்டர் அவினாஷ்மேனன் ராஜேந்திரன் குடோனுக்கு வியாழக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்து அதிகாரிகளிடம் தகவல் பெற்றார். தற்போது, ​​உணவுத் துறையினர், கிடங்கிற்கு சீல் வைத்து, பாதுகாப்புக்காக போலீசார் போடப்பட்டுள்ளனர்.தாலுகா வேளாண்மை உற்பத்தி கூட்டுறவு விற்பனை சங்க ஆட்சிக் குழு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்வது வியாழக்கிழமை முதல் தொடங்கி உள்ள‌து. இந்த நிலையில், நடைபெற்றுள்ள சம்பவம் பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.சம்பவம் தொடர்பாக வேளாண் உற்பத்தி கூட்டுறவு சங்கத்தின் (டிஏபிஎம்எஸ்) உரிமம் ரத்து செய்யப்படும். நியாய விலைக் கடைகளுக்கு அரசு கிடங்கு கழக, கிடங்கில் இருந்து அரிசி வழங்கப்படும் என்று ரம்யா தெரிவித்தார்.இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களுக்கு பதிலளித்த தாலுகா வேளாண்மை உற்பத்தி கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் மெஹ்ரிஷ், ‘நடந்த இந்த‌ சம்பவம் தொடர்பாக எங்கள் மீது எந்த தவறும் இல்லை. சத்துணவு வழங்குவதற்கான உரிமம் சங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிலையிலும், ஊழியர்கள் மூலம் உணவுப் பொருள்களை விநியோகம் செய்து வருகிறோம்.இங்கு மாதந்தோறும் வரும் ரேஷனின் அனைத்து தகவல்களும் உணவுத்துறை மூலம் சரிபார்க்கப்படுகிறது. அதிகாரிகள் கூறிய பிறகுதான் அரிசி காணாமல் போனது தெரிய வந்தது. இந்த செயலுக்கு எங்களின் பங்கு எதுவும் இல்லை. இந்தனை சம்பந்தப்பட்ட துறை கவனித்திருக்க வேண்டும்என்றார்.கிடங்கில் இருந்த‌ அரிசி காணாமல் போனதற்கு ‘நிர்வாகமே பொறுப்பு’ என்று டிஏபிஎம்எஸ் தலைவர் மெஹ்ரிஷ் கூறியதற்கு பதில் அளித்த‌ விவசாயிகள் சங்கத் தலைவர் சி. புட்டசாமி, ‘நியாய விலைக் கடைகளுக்கு ரேஷன் வினியோகம் செய்யும் உரிமம் பெற்ற சங்கத்தினரிடம் உள்ளது. கிடங்கில் உள்ள அரிசி காணாமல் போனதற்கு, உணவு துறையை தற்போது சுட்டிக் காட்டுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.அரிசி விநியோகத்தில் கமிஷன் பெறுபவர்கள் தங்கள் பொறுப்பை தட்டிக்கழிப்பது சரியல்ல. இவ்வளவு பெரிய அளவில் உணவு பொருள்கள் காணாமல் போனதற்கு பின்னால் பெரிய நெட்வொர்க் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாகவும், போலீசார் விரிவான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட‌ அனைவரையும் கைது செய்ய வேண்டும்’ என்றார்.