18 லஞ்ச அதிகாரிகள் சிக்கினர்

பெங்களூர் : ஆகஸ்ட். 17 – பெங்களூர் , குடகு , பீதார் சித்ரதுர்கா உட்பட மாநிலத்தின் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் சோதனைகள் மேற்கொண்டுள்ள லோகாயுக்தா அதிகாரிகள் 18 ஊழல் அதிகாரிகளிடமிருந்து பல கோடிகள் மதிப்புள்ள அக்கிரம சொத்துக்களை கண்டுபிடித்துள்ளனர். வருமானத்துக்கு மீறி நூறு மடங்கிற்கும் அதிகமாக அக்கிரம சொத்துக்களை சேர்த்து வைத்துக்கொண்டு நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்த அரசு அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை அளித்த லோகாயுக்தா அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் மேற்கொண்டுள்ள சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகின்ஸ்ட்ரானர். மஹாதேவபுரா வளையத்தின் பெங்களூர் மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரி நடராஜ் என்பவரின் அலுவலகம் , மற்றும் அவருக்கு சொந்தமான பங்காரகிரி பகுதியில் உள்ள வீடு , பனசங்கரியில் உள்ள வீடு , கனகபுரா தாலூக்காவின் ஷிவனஹள்ளியில உள்ள வீடு ஆகியவற்றில் சோதனைகள் மேற்கொண்டு இவரிடமிருந்து கோடிக்கணக்கான சொத்துக்களை கண்டெடுத்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 4 அன்று அபார்ட்மெண்ட் ஒன்றின் 79 குடியிருப்புகளுக்கு காத்தா வழங்க ஐந்து லட்ச ரூபாய் லஞ்சம் பெறும்போது நடராஜ் லோகாயுக்தா அதிகாரிகளிடம் கையும் களவுமாக சிக்கினார் .

சித்ரதுர்கா மாவட்டத்தின் ஹொலால்கெறே தாலூகாவின் சிறிய நீர்ப்பாசன துறை பொறியாளர் கே மஹேஷ் மற்றும் அவருடைய மனைவி பெங்களூர் மாநகராட்சி உதவி பொறியாளர் பாரதி ஆகியோருக்கு சொதமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் லோகாயுக்தா போலீசார் சோதனைகள் மேற்கொண்டுள்ளனர். தாவணகெரேவில் உள்ள கே மஹேஷ் மற்றும் பாரதி ஆகியோருக்கு சொந்தமான வீட்டில் நடந்த சோதனைகளின் போது 15 லட்ச ரூபாய்க்கும் அதிகமான ரொக்கம் , ஒரு கிலோவுக்கு அதிகமான தங்க நகைகள் , கண்டெடுக்கப்பட்டுள்ளது . இதற்க்கு முன்னர் சித்ரதுர்கா நகர அபிவிருத்தி ஆணையத்தின் ஆணையர் மற்றும் பி ஆர் இ டி துறையில் பணியாற்றியுள்ள கே பாரதி மகேஷ் வீட்டில் சித்ரதுர்கா லோகாயுக்தா டி எஸ் பி வாசுதேவராவ் தலைமையில் சோதனைகள் நடந்து வருகிறது. இதே போல் குடகு ஏ டி சி நஞ்சுண்டேகௌடா என்பவரின் அலுவலகம் , மடிகேரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் வீடு தவிர அருகிலியேயே உள்ள விருந்தினர் மாளிகை ஆகியவற்றில் மேற்கொண்ட சோதனைகளின் போது பணங்களை என்னும் கருவியும் தருவிக்கப்பட்டுள்ளது எனில் அந்தளவிற்கு அக்கிரம ரொக்கம் இவர் வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதே போல் கொப்பாளா நிர்மிதி மையத்தின் அலுவலக நிர்வாகி மஞ்சுநாத் பண்ணிகொப்பா என்பவருக்கு சொந்தமான நிர்மித்தி மையம் , வீடு , ஹுலகியில் உள்ள லாட்ஜ் ஆகியவற்றில் லோகாயுக்தா அதிகாரிகள் சோதனைகள் மேற்கொண்டுள்ளனர். நகரின் மங்களா மருத்துவமனையின் பின்பகுதியில் உள்ள வீட்டிலும் அதிகாரிகள் சோதனைகள் மேற்கொண்டுள்ளனர். இந்த இடங்களில் பெருமளவிலான அக்கிரம ரொக்கம் மற்றும் சொத்துக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. அதே போல் துமகூர் நகர அபிவிருத்தி ஆணையத்தின் இணை இயக்குனர் நாகராஜு என்பவரின் வீடு மற்றும் அலுவலகத்தில் லோகாயுக்தா அதிகாரிகள் சோதனைகள் நடத்தி வருகின்றனர். தும்கூர் நகரின் தேவனூர் சர்ச் அருகில் உள்ள நாகராஜுக்கு சொந்தமான வீடு , மற்றும் நகரின் பெலகும்பா வீதியில் உள்ள தும்கூர் அபிவிருத்தி வாரிய அலுவலகத்திலும் அதிகாரிகள் சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர். நாகராஜு பாவகாடா தாலூகாவின் அரிசிகேரேவை சேர்ந்தவர். கடந்த ஒன்றரை வருடங்களாக தும்கூர் நகர அபிவிருத்தி ஆணையத்தின் இணை இயக்குனராக பணியாற்றிவருகிறார். அரிசிகெரேயில் உள்ள வீடு உட்பட மொத்தம் மூன்று இடங்களில் லோகாயுக்தா சோதனைகள் நடந்து வருகிறது. தாவணகெரே மாவட்டத்தின் சன்னகிரி தாலூகாவின் வனத்துறை அதிகாரி பிரிவு வனத்துறை அதிகாரி சதீஷ் என்பவரின் வீட்டிலும் லோகாயுக்தா அதிகாரிகள் சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர். பல ஆண்டுகளாக வனத்துறை அதிகாரியாக பணியாற்றி வரும் சதீஷ் தன்னுடைய வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை வைத்து இந்த சோதனைகளை லோகாயுக்தா மேற்கொண்டுள்ளது/.ராய்ச்சூர் எஸ்பி அரசித்தி தலைமையில் மொத்தம் மூன்றிடங்களில் ஐந்து குழுக்கள் ஒரே நேரத்தில் சோதனைகள் நடத்தி வருகிறது. பீதர் மாவட்டத்தின் ஊழல் போலீஸ் அதிகாரி என்றே புகழ் பெற்றுள்ள விஜயகுமார் வீட்டில் சோதனைகள் மேற்கொண்டுள்ள லோகாயுக்தா அதிகாஆரிகள் தற்போது சீடகுப்பா போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் விஜயகுமாருக்கு சொந்தமான ஹுமணாபாத் நகரில் உள்ள டீச்சர் காலனி , மற்றும் ஹுச்சனஹள்ளி கிராமத்தில் உள்ள வீடுகள் ஆகியவற்றில் லோகாயுக்தா அதிகாரிகள் சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனைகளால் பெருமளவு அக்கிரம சொத்துக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது . இந்த சோதனைகளில் கண்டெடுக்கப்பட்ட சொத்து நகைகள் , மற்றும் ரொக்க விவரங்கள் குறித்து லோகாயுக்தா இன்னமும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை.