183 சிறுவர், சிறுமிகள்கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்பு

புதுடெல்லி, ஆக். 3 –
நாட்டின் மிக பெரிய போக்குவரத்து துறையாக இந்திய ரெயில்வே உள்ளது. இதில், நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இதனை மனித கடத்தல்காரர்களும் தங்களது தேவைக்காக பயன்படுத்தி கொள்கின்றனர். தங்களிடம் சிக்கும் நபர்களை ஓரிடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு குறைந்த செலவில், அதிக தொலைவுக்கு பயணம் செய்து, கடத்தி செல்வதற்கு ரெயில்வேயை பயன்படுத்தி கொள்கின்றனர்.
இதனை தடுப்பதற்காக ரெயில்வே பாதுகாப்பு படையினர் திறமையாக செயல்பட்டு வருகின்றனர். பயணிகளின் பாதுகாப்பு தொடர்புடைய குறைகளை தீர்க்கும் நடவடிக்கைகளை பொறுப்புடன் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்படி, கடந்த 5 ஆண்டுகளில் (2017 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில்) கடத்தல்காரர்களிடம் இருந்து 2,178 பேரை மீட்டுள்ளனர். குழந்தைகள், மகளிர் மற்றும் ஆடவர் என பாதுகாப்பும், கவனமும் தேவைப்பட்ட 65 ஆயிரத்திற்கும் கூடுதலானோருக்கு உதவிகளையும் செய்து அவர்களை துயரில் இருந்து மீட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக கடந்த ஜூலையில், சிறப்பு ஒரு மாத கால மனித கடத்தல் தடுப்பு நடவடிக்கையை ரெயில்வே பாதுகாப்பு படை மேற்கொண்டது.

https://www.dailythanthi.com/News/India/183-boys-and-girls-rescued-from-traffickers-railway-security-force-in-action-760513