19 வயது மாணவி மாரடைப்பில் சாவு

மங்களூர் : ஆகஸ்ட். 14 – நகரில் முதலாண்டு செவிலியர் பட்ட படிப்பு படித்து வந்த சுமா என்பவருக்கு அடிக்கடி சுகாதார நிலைமை மோசமாகி வந்துள்ள நிலையில் இவருக்கு குறைந்த ரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட்டு இதன் விளைவாய் இவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தக்ஷிண கன்னடா மாவட்டத்தின் பெல்தங்கடி தாலூக்காவின் நெறியா என்ற கிராமத்தில் நடந்துள்ளது. இறந்தவர் சுமா (19) தெரியவந்துள்ளது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் உடல்நிலை பாதிப்பால் சுமா சிகிச்சை பெற்று வீட்டில் இருந்துள்ளார். இதே வெளியில் இம்மாதம் 9 அன்று உடல்நிலை பாதிப்பிற்க்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர் மீண்டும் 11 அன்று உடல் நிலை பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மங்களூரில் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார். தவிர தன்னுடைய உடல் நிலை சரியாகிவிட்டது என கருதிக்கொண்டிருந்த நேரத்தில் மீண்டும் 13 அன்று உடல்நிலை கோளாறு அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.