1980 மொராதாபாத் கலவரம் 2 முஸ்லீம் லீக் தலைவர்களால் திட்டமிடப்பட்டது: விசாரணை அறிக்கை

லக்னோ, ஆக. 9: பிரிவினைக்குப் பிறகு உ.பி மாநிலத்தில் ரத்தக்களரியான வகுப்புவாத மோதல்களில் ஒன்றான மொராதாபாத் கலவரம், நாற்பத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, நீதிபதி மதுரா பிரசாத் சக்சேனா தலைமையில் நீதித்துறை ஆணையம் 1980 ஆகஸ்ட் 13 ஆம் தேதி அன்று அமைக்கப்பட்டது. அம்மாநில சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதிகாரப்பூர்வமாக 83 உயிர்களைப் பலிவாங்கிய வகுப்புவாதத்திற்கு, முஸ்லீம் லீக்கின் டாக்டர் ஷமிம் அஹ்மத், டாக்டர் ஹமீத் ஹுசைன் மற்றும் அவரது ஆதரவாளர்களால் தீட்டப்பட்ட சதியின் விளைவு என்று அறிக்கை தெரிவிக்கிறது. வன்முறையைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்திய‌ நிர்வாகத்தின் முடிவையும் அறிக்கை நியாயப்படுத்துகிறது. ஈகை திருநாள் தினத்தன்று ஈத்காவில் பன்றிகள் விடப்பட்டதாகவும்,அப்போது நடைபெற்ற‌ துப்பாக்கிச் சூட்டில் ஏராளமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாகவும் அவர்கள் வேண்டுமென்றே வதந்தியைப் பரப்பினர்.
இது மொராதாபாத்தில் உள்ள சமூகத்தை கோபப்படுத்தியது. மறுபக்கத்தில் இருந்து பதிலடி கொடுத்தது நகரத்தை ஒரு வகுப்புவாத கலவர‌மாக மாற்றியது என்று உ.பி சட்டப்பேரவையில், மாநில பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் சுரேஷ் குமார் கன்னா தாக்கல் செய்த அறிக்கை கூறுகிறது.
வன்முறையில் ஆர்எஸ்எஸ் அல்லது பாஜகவின் பங்கு வெளிப்படவில்லை என்றும், சூழலைக் கையாள்வதில் அரசு அதிகாரிகளின் தரப்பில் எந்த மெத்தனமும் இல்லை. கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாக விசாரணை அறிக்கையை வெளிடாமல், மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் பாதுகாத்து வந்துள்ளது என்று அது கூறுகிறது.
“1980 ஆகஸ்ட் 13 ஆம் தேதிக்குப் பிறகும் கலவரம் தொடர்ந்தது, மேலும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டனர். இது சமூகத்தில் கோபத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் பெரும்பான்மையான மக்கள் கூட்ட நெரிசலில் கொல்லப்பட்டனர் என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது” என்று அறிக்கை மேலும் கூறுகிறது.
மொராதாபாத் கலவரம், ஆகஸ்ட் 1980 இல் தொடங்கி, ஜனவரி 1981 வரை நீடித்தது. அப்போது உ.பி.யில் காங்கிரஸ் அரசின் முதல்வராக வி.பி.சிங் இருந்தார். மத்தியிலும் இந்திரா காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி இருந்தது.
கலவரத்துக்குப் பிறகு அப்போதைய முதல்வர் வி.பி.சிங், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி எம்.பி.சக்சேனா தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட்டார்.