2ம் ஆண்டு பியூசி தேர்வுகள் தொடங்கியது

பெங்களூர் : மார்ச். 9 –
கர்நாடக மாநிலத்தில் இன்று இரண்டாம் ஆண்டு பியூசி தேர்வுகள் துவங்கியது.மாணவர்கள் ஆர்வமுடன் வந்து தேர்தலை எழுதினர்.இன்று முதல் மாநிலம் முழுக்க துவங்கிய பி யு தேர்வுகளில் 7 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வுகள் எழுதினர் பி யு தேர்வுகள் வரும் 29 வரை நடக்க உள்ளது. இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் மே மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என மாநில பள்ளி கல்வி மற்றும் எழுத்து கல்வி அமைச்சர் பி சி நாகேஷ் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்தபடி இந்தாண்டும் ஆண்களை விட பெண்களே அதிகளவில் இந்த தேர்வுகளுக்கு பதிவாகியுள்ளனர். இன்று முதல் நடந்து வரும் இந்த பி யு தேர்வுகள் தினசரி காலை 10.15 க்கு துவங்கி மதியம் 1.30 மணிவரை நடைபெறும். கடந்த 2021ல் மாநிலம் முழுக்க ஏற்பட்ட கொரோனா தொற்றால் தேர்வுகளின்றி எஸ் எஸ் எல் சி தேர்வுகளில் வெற்றிபெற்றவர்களாக அறிவிக்கப்பட்ட மாணவர்களே இந்தாண்டு பி யு சி தேர்வுகளில் பங்குகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாநிலம் முழுக்க 1108 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடக்கின்றன. இதில் பெங்களுருவில் அதிகபட்சமாக 156 தேர்வு மையங்களிலும் குறைந்த பட்சமாக ராம்நகரில் 13 மையங்களிலும் தேர்வுகள் நடந்து வருகிறது.

இந்தாண்டு பி யு சி தேர்வுகளுக்கு மொத்தம் 726195 மாணவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் . இதில் 629760 மாணவர்கள் வழக்க்மானவர்கள் என்பதுடன் இதில் 325045பேர் மாணவியர் மற்றும் 304715 பேர் மாணவர்கள் ஆவர். இதில் கலைத்துறையில் 1.9 லட்ச மாணவர்களும் வர்த்தக துறைக்கு 2.1 லட்ச மாணவர்களும் 2.2. லட்ச மாணவர்கள் விஞ்ஞான துறைக்கும் பதிவு செய்துள்ளனர். இதுவே கடந்த ஆண்டு பி யு தேர்வுகளுக்கு 6 லட்ச மாணவர்கள் பதிவாகியிருந்த நிலையில் இந்தாண்டு 6.3 லட்ச மாணவர்கள் பி யு தேர்வுகளுக்கு பதிவாகியுள்ளனர். இந்தாண்டு நடைபெறும் பி யு தேர்வுகளுக்கு பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள நிலையில் மாணவர்கள் தேர்வு அறைக்கு வரும் முதல் வெளியே செல்லும் வரை முழுவதும் சி சி டி வி காமிராக்ளில் பதிவாகும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்ட்டுள்ளது. தவிர மாணவர்களின் கையொப்பம் பெற்ற பின்னரேயே கேள்வி தாள்கள் திறக்கப்படும். தவிர கேள்வி தாள்கள் கசிவு போன்ற தேவையில்லாத வதந்திகளை கிளப்புவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்த அமைச்சர் நாகேஷ் தேர்வு மையங்களின் 200 மீட்டர் சுற்றுப்பகுதிக்கு பாதுகாப்பு வளையமாக கருத்தப்பட்டு அப்பகுதிகளில் எவ்வித போன்கள் , ஸ்மார்ட் வாட்சுகள் போன்றவை அனுமதிக்கப்பட்ட்து எனவும் தெரிவித்துள்ளார். இதே வேளையில் கே எஸ் ஆர் டி சி மற்றும் பி எம் டி சி பஸ்கள் பி யு தேர்வுகளுக்கு தங்கள் வீட்டிலிருந்து செல்லும் மாணவர்களை இலவசமாக தேர்வு மையங்களுக்கு அழைத்து சென்று பின்னர் அவர்களின் இருப்பிடத்திற்கு சேர்க்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது