2ம் ஆண்டு பியூசி மாணவி மாரடைப்பில் சாவு

மங்களூரு, பிப். 16: இரண்டாம் ஆண்டு பியூசி பயிலும் மாணவி மாரடைப்பால் உயிரிழந்தார்.
சமீபகாலமாக பல இளைஞர்கள் மாரடைப்பால் இறக்கின்றனர் என்பது துரதிஷ்டவசமான உண்மை. தற்போது தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூரில் உள்ள செயின்ட் பிலோமினா கல்லூரியில் இரண்டாம் பியூசி மாணவி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுக்கா உப்பினங்காடி அருகே உள்ள நெக்கிலடி குர்வேலு கிராமத்தில் இரண்டாம் பியூசி பயிலும் மாணவி ஹபீசா (17) மாரடைப்பால் உயிரிழந்தார். உப்பினங்கடியைச் சேர்ந்த தொழிலதிபர் தாவூத் என்பவரின் மகள் ஹபீசா பியூசி 2ம் படித்து வந்தார். நேற்று இரவு வெகுநேரம் வரை படித்துவிட்டு தூங்கினார் ஹபீசா. ஆனால் காலையில் எழுந்திருக்கவில்லை. தூங்கும் போது அவர் உயிரிழந்துள்ளார்.