2வது டோஸ் செலுத்திய பிறகும் துரைமுருகனுக்கு கொரோனா


சென்னை, ஏப். 8- திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. கொரோனா பரிசோதனையில், அவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள துரைமுருகன், ஏற்கனவே கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்டுள்ளார்.