2 ஆட்டோ டிரைவர்கள் கைது

மும்பை, ஆக.3 -மும்பை பாந்திரா-குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் இருந்து 48 வயது நபர் ஒருவர் தனது ஊழியருடன் ஆட்டோவில் ஏறினார். குர்லா டெர்மினல் செல்லும்படி ஆட்டோ டிரைவரிடம் தெரிவித்தார். இதற்கு ஆட்டோ டிரைவர் மீட்டர் அடிப்படையில் செல்லாமல் ரூ.100 கட்டணம் தர வேண்டும் என தெரிவித்தார். இதனால் பயணி மறுப்பு தெரிவித்து ஆட்டோ டிரைவரிடம் வாக்குவாதம் செய்தார். மேலும் அருகில் உள்ள பி.கே.சி போலீஸ் நிலையம் அழைத்து செல்லும் படி கூறினார். ஆட்டோ டிரைவர் 2 பேரையும் அழைத்து கொண்டு செல்லும் வழியில் மற்றொரு ஆட்டோ டிரைவருடன் சேர்ந்து பணம் தர மறுப்பு தெரிவித்தவரை தாக்கினர். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பாரத் நகர் பகுதியை சேர்ந்தவர் உள்பட 2 ஆட்டோ டிரைவர்களை போலீசார் கைது செய்தனர்.