2 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பதி மாடவீதிகளில் வாகன சேவை

திருப்பதி , ஜூலை 29:
பிரம்மோற்சவ விழா வரும் செப்டம்பர் 27-ந்தேதி தொடங்கி அக்டோபர் 5-ந்தேதி வரை நடக்கிறது. 1-ந்தேதி கருடசேவை நடக்கிறது. 2-ந்தேதி தங்கத்தேரோட்டம் நடைபெற உள்ளதுஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வரும் செப்டம்பர் மாதம் தொடங்கி நடக்கிறது. அதையொட்டி 2 ஆண்டுகளுக்கு பிறகு கோவிலில் நான்கு மாடவீதிகளில் வாகனச் சேவை நடக்க உள்ளது. அதையொட்டி திருமலையில் உள்ள அன்னமய பவனில் நேற்று திருப்பதி மாவட்ட கலெக்டர் வெங்கட்ரமணாரெட்டி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரமேஷ்வர்ரெட்டி மற்றும் திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பேசியதாவது:- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வரும் செப்டம்பர் மாதம் 27-ந்தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 5-ந் தேதி வரை நடக்கிறது. 27-ந்தேதி கொடியேற்றம், 1-ந்தேதி கருடசேவை, 2-ந்தேதி தங்கத்தேரோட்டம், 4-ந்தேதி தேர்த்திருவிழா, 5-ந்தேதி சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடக்கிறது.