2 ஆம் ஆண்டு பியூசி தேர்வு மையங்களை சுற்றி தடை உத்தரவு

பெங்களூரு, பிப். 29: மார்ச் 1 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை பியூசி 2 ஆம் ஆண்டுக்கான தேர்வு நடைபெற உள்ளதால், அந்த‌ மையங்களின் 200 மீட்டர் சுற்றுளவில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பெங்களுரு மாநகர காவல் ஆணையர் பி.தயானந்த வெளியிட்டுள்ள அறிக்கை: 2024 ஆம் ஆண்டுக்கான 2 ஆம் ஆண்டுத் தேர்வுகள் மார்ச் 1 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன., மேலும் தேர்வுகளை சுமுகமாகவும் ஒழுங்காகவும் நடத்த தேர்வு மையங்களைச் சுற்றியுள்ள 200 மீட்டர் சுற்றுளவு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க‌ப்பட்டுள்ளது.
மேலும் 2 ஆண்டு பியூசி தேர்வு நடைபெறும் நாட்களில், தேர்வு மையங்களின் 200 மீட்டர் சுற்றளவில் உள்ள ஜெராக்ஸ் கடைகள் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அடைக்கவும் மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.