2 எம்எல்ஏக்கள் வீடுகளில் சோதனை

பெங்களூரு, ஜூன் 10- முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான பி. நாகேந்திரன் மற்றும் வால்மீகி வளர்ச்சி கழக தலைவரும் எம்எல்ஏவுமான பசவராஜ் தாடல் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. சோதனை நடத்தப்பட்டு, எம்எல்ஏ நாகேந்திரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும்,வால்மீகி வளர்ச்சிக் கழக தலைவர் மற்றும் அதிகாரிகளின் வீடுகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
இன்று அதிகாலை பெல்லாரி, பெங்களூரில் உள்ள எம்எல்ஏ நாகேந்திரன் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், ராய்ச்சூரில் உள்ள எம்எல்ஏ பசவராஜ் தாடலின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தி பல ஆவணங்களை கைப்பற்றினர்.
இந்த சோதனையின் போது அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்னாள் அமைச்சர் பி. நாகேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 • கர்நாடகா மாநில அரசின் வால்மீகி வாரியத்தில் ரூ94 கோடி முறைகேடு புகார்கள் தொடர்பாக ராஜினாமா செய்த முன்னாள் அமைச்சர் நாகேந்திரா மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ பசனகவுடா தட்டல் உள்ளிட்டோரது வீடுகளில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். வால்மீகி வாரிய முறைகேடு தொடர்பாக கர்நாடகா மாநில அரசின் சிறப்பு குழு ஏற்கனவே விசாரணை நடத்தி வரும் நிலையில் அமலாக்கத் துறையும் களமிறங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  கர்நாடகாவில் காங்கிரஸ் அரசுக்கு பெரும் நெருக்கடியாக உருவெடுத்துள்ளது வால்மீகி வளர்ச்சி ஆணைய அதிகாரி சந்திரசேகர் தற்கொலை. பெங்களூர் வசந்த்நகரில் உள்ளது வால்மீகி வளர்ச்சி ஆணையம். இது பழங்குடிகள் மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தக் குடிய நல வாரியம். இதன் அதிகாரியாகப் பணியாற்றிய சந்திரசேகர்( வயது 52) ஷிமோகாவில் உள்ள வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
  தற்கொலை செய்து கொண்ட அதிகாரி சந்திரசேகர் தாம் எழுதி வைத்த கடிதத்தில் ரூ94 கோடி நிதி முறைகளை விவரித்திருந்தார். அதாவது வால்மீகி சமூக வளர்ச்சி ஆணையத்துக்கு மாநில அரசு ரூ187 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. ஆணையத்தின் 3 அதிகாரிகள் ரூ85 கோடியை பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றி மோசடி செய்துள்ளனர் என்பதுதான்.
  இந்த விவகாரத்தை கையில் எடுத்த பாஜக, அமைச்சர் நாகேந்திராவை ராஜினாமா செய்ய வலியுறுத்தியது. இதனை ஏற்று வேறுவழியே இல்லாமல் அமைச்சர் நாகேந்திராவை ராஜினாமா செய்ய வலியுறுத்தினார் முதல்வர் சித்தராமையா. பின்னர் அமைச்சர் நாகேந்திராவும் ராஜினாமா செய்தார்.
  அத்துடன் இது தொடர்பாக மாநில சிறப்பு குழு விசாரணைக்கும் உத்தரவிட்டார் முதல்வர் சித்தராமையா. இந்த விசாரணை குழு முன்னர் நேற்றுதான் முன்னாள் அமைச்சர் நாகேந்திரா, காங்கிரஸ் எம்.எல்.ஏ. பசனகவுடா தட்டல் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.
  இந்த நிலையில் இன்று காலை முதல் முன்னாள் அமைச்சர் நாகேந்திரா, காங்கிரஸ் எம்.எல்.ஏ. பசனகவுடா தட்டல் ஆகியோருக்குச் சொந்தமான வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். வால்மீகி வாரியத்தில் ரூ94 கோடி முறைகேடு ஊழல் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.