2 கன்னட திரைப்படங்களுக்கு தேசிய விருது

புது டெல்லி: ஜூலை. 22 – இயக்குனர் பவன் உடையார் தயாரித்த மற்றும் இயக்கிய சாகர் புராணிக் நடிப்பில் உருவான கன்னட திரைப்படம் தொள்ளு இரண்டாவது மிக நல்ல திரைப்படமாக தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கன்னட திரைப்படம் தொள்ளு மிக சிறந்த பட விருதை பெற்றுள்ளது. இது தவிர கிரிஷ் காசரவல்லி இயக்கத்தில் உருவான சாதத நவநீதா மிக சிறந்த கலை நுட்ப படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. சஞ்சாரி விஜய் நடிப்பில் உருவான தலேதன்டா என்ற திரைப்படம் மிக சிறந்த சுற்ற சூழல் விழிப்புணர்வு படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இயக்குனர் பவன் உடையார் முதல் முறையாக திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டவர் என்பதுடன் மிக சிறந்த திரைப்படம் என்ற விருதுடன் மிக சிறந்த ஒலிப்பதிவு விருதும் தொள்ளு திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது. 30 பல்வேறு மொழிகளின் 400 திரைப்படங்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டன .

இவற்றில் கன்னட திரைப்படம் தொள்ளு இரண்டு பிரிவுகளில் விருதுகளை பெற்றுள்ளது. மிக சிறந்த கன்னட திரைப்படம் மற்றும் சிறந்த ஒலிப்பதிவு விருதுகள் தொள்ளு திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது.