2 கார்களுக்கு தீவைப்பு 11 பேர் கைது

பெங்களூரு, ஜூலை.21- காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்க இயக்குனரகம் (இடி) விசாரணை நடத்தியதைக் கண்டித்து பெங்களூரில் உள்ள அமலாக்க அலுவலகம் முன்பு காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, ​​மர்ம நபர்கள் 2 கார்களுக்கு தீ வைத்தனர்.
சாந்திநகரில் உள்ள இடி அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தீயணைப்பு படையினரை வரவழைத்து தீயை அணைத்தனர். மாநகர போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி சம்பவ இடத்தை பார்வையிட்ட்டார். கார்களுக்கு தீ வைத்த 11 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், தீ வைத்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர் என்றும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது தொடர்பாக, போலீஸ் காவலில் எடுக்கப்படும் நபரிடம் விசாரணை நடத்தி, உரிய தகவல்கள் பதிவு செய்யப்படும். மேலும், அந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும் அவர் கூறினார்.