2 குற்றவாளிகள் சுட்டு பிடிப்பு

கோலார் : அக்டோபர் . 24 – காங்கிரஸ் பிரமுகர் , மற்றும் முன்னாள் சபாநாயகருமான ரமேஷ் குமாரின் செயலாளர் ஸ்ரீனிவாஸ் என்பவரின் கொலை விவகாரத்தில் ஈடுபட்ட இரண்டு குற்றவாளிகளை போலீசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்துள்ளனர் . இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளி வேணுகோபால் மற்றும் மணீந்திரா ஆகியோரின் கால்களில் துப்பாக்கியால் சுட்டு பின்னர் அவர்களை அருகில் உள்ள மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த வழக்கின் மற்றொரு குற்றவாளி சந்தோஷ் என்பவனும் காயங்கலடைந்துள்ளான் . கோலார் மாவட்ட மேமகள் தாலூகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் தற்காப்புக்காக சுட்ட தோட்டா இருவர் காலுக்கு பாய்ந்து காயங்கள் ஏற்பட்டுள்ளது. குற்றவாளிகளை கைது செய்து அழைத்து வரும் வேளையில் லட்சுமி சாகர் வனப்பகுதியில் போலீசாரை தாக்க முயற்சித்த குற்றவாளிகள் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த தாக்குதலின்போது இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் போலீஸ் சிப்பந்தி மஞ்சுநாத் மற்றும் நாகேஷ் ஆகியோருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு கோலார் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீனிவாஸ் கொலை வழக்கின் குற்றவாளிகள் ஆறு பேரில் இதுவரை மூன்று முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா மற்றும் முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார் ஆகியோரின் செயலாளரான ஸ்ரீனிவாஸ் என்பவரை குற்றவாளிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பட்டப்பகலில் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்திருந்தனர். கொலையுண்ட ஸ்ரீனிவாஸ் ஸ்ரீனிவாசபுரா தாலூகாவின் காங்கிரஸ் பிரமுகர் மற்றும் நகரசபை உறுப்பினராக இருந்தார். இவர் அடுத்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இருந்தார். மூலபாகிலு வீதியின் கட்டிவரும் நிலையில் இருந்த ஓட்டல் அருகில் ஆறு பேர் சேர்ந்த கும்பல் இவரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பியோடியிருந்தது. ரத்த வெள்ளத்தில் இருந்த ஸ்ரீநிவாஸை உடனே உள்லூர்வாசிகள் ஜாலப்பா மருத்துவமனையில் சேர்த்தும் சிகிச்சை -பலனின்றி இவர் இறந்துபோனார். காங்கிரஸ் பிரமுகர் மற்றும் பட்டியலின பிரமுகர் கொடூரமாக கொலை செய்திருப்பது குறித்து ஸ்ரீனிவாஸ் புரம் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. பட்டியலின ஆதரவு சங்கங்கள் சார்பில் ஸ்ரீனிவாஸ் கொலை குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என போராட்டம் நடத்தப்பட்டது. ஸ்ரீனிவாசன் உடல் இன்று மாலை அவருடைய வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அவருடைய உடலுக்கு முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார் மற்றும் முக்கிய காங்கிரஸ் பிரமுகர்கள் இறுதி அஞ்சலை செலுத்தினர். இன்று மாலை அவருடைய தோட்டத்தின் அருகிலேயே இறுதி சடங்கு நடக்க உள்ளது.