2 சிறுவர்கள் மூழ்கி சாவு

கதக் : ஆகஸ்ட். 16 – மாட்டை கழுவ நதியில் இறங்கிய இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி இறந்துள்ள பரிதாப சம்பவம் ரஹீமத் நகரில் நடந்துள்ளது. இந்த நகரில் வசித்து வந்த முஹம்மத் அமன் (12) மற்றும் சந்தோஷ் கும்பார் (14) ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்த சிறுவர்கள். இந்த விபத்தில் மேலும் இரண்டு பேர் இருப்பினும் இவர்கள் உயிராபதிலிருந்து தப்பியுள்ளனர் . நான்கு சிறுவர்கள் நேற்று மாலை மாடுகளை கழுவ ரஹீமத் நகரின் அருகில் உள்ள நதிக்கு சென்றுள்ளனர். நதியின் ஆழம் தெரியாமல் இறங்கிய இருவருக்கும் நீச்சல் தெரியாததால் நீரில் மீழ்கி இறந்துள்ளனர். இறந்த சிறுவர்களின் உடல்களை தீயணைப்பு படையினர் ஷஹரா போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாடுகளைக் கழுவ ஆற்றில் இறங்கிய போது இரண்டு சிறுவர்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.