2 தீவிரவாதிகளுக்கு எதிராக குற்றப் பத்திரிக்கை தாக்கல்

பெங்களூர் : ஜனவரி. 20 – தீவிரவாத நடவடிக்கைகளின் பின்னணியில் நடவடிக்கை மேற்கொண்ட திலக் நகர் போலீசார் கைது செய்த இரண்டு சந்தேகத்துக்குரிய தீவிரவாதிகளுக்கு எதிராக தேசிய புலனாய்வு முகம ( ஏன் ஐ ஏ ) சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர் .
சந்தேகத்துக்குரிய தீவிரவாதிகளான அக்தர் ஹுசேன் , மற்றும் அப்துல் ஆலிம் ஆகியோருக்கு எதிராக என் ஐ ஏவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய பட்டுள்ளது. திலக் நகரில் டெலிவரி பணியை செய்து கொண்டு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்த இவர்கள் இருவரும் சமூக வலை தளங்கள் வாயிலாக தீவிரவாத நடவடிக்கைகளுக்கு இளைஞர்களை கவர்ந்து வந்ததாக குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது . குற்றவாளிகள் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்கள் ஆன அல் கொய்தா இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததுடன் இந்தியாவில் மத கலவரங்களை தூண்ட குற்றவாளிகள்
இளைஞர்களை ஊக்கப்படுத்திவந்துள்ளனர். குற்றவாளிகள் எண்ட் டு எண்ட் என்க்ரிபைட் கம்யூனிகேஷன் வாயிலாக வெளிநாடுகளில் உள்ள ஆன் லைன் பயனாளிகளிடம் தொடர்பில் இருந்துள்ள தகவலும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களை சோதனை செய்த வேளையில் ஜிஹாதி ஆவணங்கள் , எலக்ட்ரானிக் கருவிகள் , கண்டெடுக்கப்பட்டிருப்பதுடன் ஆல் கொய்தா இயக்கத்தில் சேர தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்து இந்தியாவில் அமைதியை சீர்குலைக்க சதி திட்டம் தீட்டி வந்திருப்பதாகவும் குற்றவாளிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.