2 தீவிரவாதிகள் கைது

ஜம்மு : ஆகஸ்ட். 18 – ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் உள்ள பதாண்டி என்ற பகுதியில் தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் சோதனைகள் நடத்தி இரண்டு சந்தேகத்துக்குரிய தீவிரவாதிகளை கைது செய்துள்ளனர். ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியின் சோபோர் பகுதி போலீசாரின் உதவியுடன் கூட்டு நடவடிக்கை மேற்கொண்ட தேசிய புலனாய்வு அதிகாரிகள் இரண்டு ஓ ஜி டபிள்யூ எஸ் ( ஓவர் கிரௌண்ட் வொர்க்கர்ஸ் ) தீவிரவாதிகளை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதிகளிடமிருந்து தோட்டாக்கள் மற்றும் க்ரேனைட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மத்திய புலனாய்வு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.