2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

Srinagar: Special Operation Group (SOG) of J&K police at the site of an encounter in which Lashkar-e-Taiba (LeT) terrorist Adil Parray, who was involved in the recent killings of two police personnel, was killed, at the Kreesbal Palpora Sangam area in Srinagar, Sunday, June 12, 2022. (PTI Photo)(PTI06_12_2022_000149A)

ஜம்மு ஜூன். 14
ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டரில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி உள்பட இரண்டு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர். இதுகுறித்து காஷ்மீர் மண்டல காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் விஜய் குமார் கூறியதாவது:- ஸ்ரீநகர் நகரின் பெமினா பகுதியில் நடந்த என்கவுண்டரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த என்கவுண்டர் நடவடிக்கையில் போலீஸ் ஒருவருக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. என்கவுண்டர் நடந்த பகுதியில் இருந்து ஆவணங்கள் மற்றும் பிற பொருட்களை ஆராய்ந்ததில், கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் பாகிஸ்தானில் உள்ள பைசலாபாத்தில் வசிக்கும் அப்துல்லா கவுஜ்ரி என அடையாளம் காணப்பட்டுள்ளது. ஏற்கவனே நடந்த சோபூர் என்கவுண்டரில் இருந்து தப்பிய அதே பயங்கவாதக் குழு ஆகும். அவர்களின் நடமாட்டத்தை நாங்கள் கண்காணித்து வருகிறோம். கொல்லப்பட்ட மற்றொரு பயங்கரவாதி அனந்த்நாக் மாவட்டத்தில் வசிக்கும் சுஃபியான் என்கிற அடில் ஹூசைன் மிர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.