2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 சரிவு

சென்னை: ஆகஸ்ட் 22-
சென்னையில் இன்று (ஆகஸ்ட் 22) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.73,720க்கு விற்பனை ஆகிறது.
தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 9,180 ரூபாய்க்கும், சவரன் 73,440 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று (ஆகஸ்ட் 21) தங்கம் விலை கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து, 9,230 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து, 73,840 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 22) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.73,720க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.9,215க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 சரிவை கண்டுள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்தனர்.