2 நாள் சர்வதேச மாநாடு

அக். 19: சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் 10ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு சர்வதேச மாநாடு பீஜிங்கில் நடைபெறுகிறது. பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் 10ம் ஆண்டு நிறைவை ஒட்டி 2 நாள் சர்வதேச மாநாட்டை சீன தலைநகர் பீஜிங்கில் அதிபர் ஷி ஜின்பிங் தொடங்கி வைத்தார். இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்பட 130-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். பீஜிங்கில் மாநாடு தொடங்குவதற்கு முன்பாக மாநாட்டு அரங்கில் உலகத் தலைவர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.